மலாயாப் பல்கலைக்கழக கருத்தரங்கு மீது அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது என்கிறார் முனைவர்

Redzuanமலாயாப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜனநாயக, தேர்தல்கள் மய்யம் ஏற்பாடு செய்த தேர்தல் மீதான கருத்தரங்கை ரத்துச் செய்யுமாறு அரசாங்கம் அழுத்தம் கொடுத்த பின்னர் சில திருத்தங்களுடன் இன்று நடத்தப்பட்டது.

அந்த உத்தரவு பிரதமர் அலுவலகத்திடமிருந்தும் உயர் கல்வி அமைச்சிலிருந்தும் வந்ததாக அந்த மய்யத்தின் இயக்குநர் முகமட் ரெட்சுவான் ஒஸ்மான் கூறினார்.

“அந்தக் கருத்தரங்கை ரத்துச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் குறுஞ்செய்தி இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் லண்டனிலிருந்து திரும்பியதும் கிடைத்ததாக அவர் அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களிடம் கூறினார்.

“அந்த உத்தரவு பிரதமர் அலுவலகத்திடமிருந்தும் உயர் கல்வி அமைச்சிலிருந்தும் வந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. காரணம் ஏதும் கூறப்படவில்லை,” என கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக்கழக விரிவுரை மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட அந்தக் கருத்தரங்கில் முகமட் ரெட்சுவான் இன்று காலை தெரிவித்தார்.

அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் கலை சமூக அறிவியல் பிரிவின் தலைவரும் ஆவார். அந்த உத்தரவு கிடைத்த பின்னர் நான் பல்கலைக்கழக துணை வேந்தருடன் கலந்தாய்வு செய்தேன். அவர் அதற்கு ஆதரவாக இருந்தார். அந்த விவகாரம் மீது முடிவு செய்யுமாறு தம்மிடம் கூறியதாக அவர் சொன்னார்.

“என் சகாக்களுடன் பேசிய பின்னர் கல்வி சார்ந்த வழியில் பிரச்னைகளை விவாதிப்பது என நாங்கள் முடிவு செய்தோம்,” என்றார் அவர்.

எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள்

அந்தக் கருத்தரங்கின் இரண்டாவது நிகழ்வு தான் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. அதில் பிஎன் -னின் உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா, மஇகா-வின் உலு சிலாங்கூர் எம்பி பி கமலநாதன் ஆகியோருடன் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாரும் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசாவும் கலந்து கொள்வதாக இருந்தது.redzuan1

அந்தக் கருத்தரங்கின் தலைப்பு “13வது பொதுத் தேர்தல்: பிஎன் அல்லது பிஆர் வெற்றி பெறப் போவது யார் ?” என்பதாகும்.

அந்த நெருக்குதலைத் தொடர்ந்து அந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டு கல்வியாளர்கள் மட்டும் பங்கு கொள்ளும் புதிய நிகழ்வு சேர்க்கப்பட்டது என முகமட் ரெட்சுவான் சொன்னார்.

அதைத் தவிர அந்தக் கருத்தரங்கில் முகமட் ரெட்சுவான் கட்டுரை படைத்தார். அதற்கு முன்பு ஊடகப் பிரமுகர்கள் பங்கு கொண்ட கருத்தரங்கு நிகழ்ந்தது.

“பிஎன், பிஆர் நம்பிக்கைகள்” என்ற தலைப்பைக் கொண்ட முதல் நிகழ்வில் ஹராக்கா நாளேட்டின் தலைமை ஆசிரியர் சுல்கிப்லி சுலோங், சினார் ஹரியான் ஆசிரியர் பகுதி நிர்வாக ஆலோசகர் அப்துல் ஜலில் அலி, மலேசியாகினி தலைமை ஆசிரியர் பாத்திஸ் அரிஸ் ஒமார் ஆகியோர் பேசினர்.

இன்று பிற்பகலில் நடைபெற்ற நிகழ்வில் நுருல் இஸ்ஸா கலந்து கொண்டார். ஆனால் அவர் கூட்டத்தில் ஒருவராக இருந்தார்.

“அந்த நிகழ்வுக்கு வர வேண்டாம் எனத் தெரிவிப்பதற்காக நான் அவரை அழைத்த போது தாம் அந்த நிகழ்வுக்கு கூட்டத்தில் ஒருவராக வர முடியுமா என அவர் வினவினார். அவரை நான் நிறுத்த முடியாது என நான் சொன்னேன். ஏனெனில் அவர் லெம்பா பந்தாய் எம்பி.”

“ஆகவே நுருல் இஸ்ஸாவைச் சந்திக்க விரும்பியவர்கள் பிற்பகல் நிகழ்விலும் கலந்து கொண்டார்கள்,” என்றார் அவர்.