யாஸிட்டும் ஹாலிமாவும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களை மறுத்து விசாரணை கோரினர்

Yazid2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முதலாவது இரண்டு தனிநபர்கள் மீதான விசாரணை மே 20ம் தேதி தொடங்கும்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றதில் இன்று காலை குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்ட பின்னர் யாஸிட சுபாட்டும் ஹலிமா ஹுசேனும் “குற்றம் செய்யவில்லை, நான் விசாரணை கோருகிறேன்,” எனக் கூறினார்கள்.

சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டுகோலாக இருந்ததாக யாஸிட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹலிமா மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஏப்ரல் 22ம் தேதி அந்த வழக்கு வழக்கு நிர்வாகத்துக்கு தாக்கல் செய்யப்படும். விசாரணை மே 20 முதல் 23 வரையும் ஜுன் 17 முதல் 21 வரையிலும் நீதிபதி கமார்தின் ஹஷிம் முன்னிலையில் நடைபெறும்.

குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட வேண்டும் அல்லது விசாரணை நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி தாம் விண்ணப்பிக்க எண்ணம் கொண்டுள்ளதாக பிரதிவாதி தரப்பு வழக்குரைஞர் அமிர் ஹம்சா அர்ஷாட் சொன்னார்.yazid1

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதிக்கும் அக்டோபர் 20க்கும் இடையில் தாமான் புக்கிட் அம்பாங்கில் உள்ள யாஸிட் வீட்டில் அந்தக் குற்றம் புரியப்பட்டதாக கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 130ஜி(ஏ) -யின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள அந்தக் குற்றச்சாட்டுக்கு 30 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். அதில் ஜாமீன்  வழங்கப்படுவதற்கு வகை செய்யப்படவில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இன்னொரு கைதியான முகமட் ஹில்மி ஹசிம் தாக்கல் செய்துள்ள ஹேபியர்ஸ் கார்ப்புஸ் மனு அதே நீதிபதியின் முன்னிலையில் பிப்ரவரி 25ம் தேதி விசாரிக்கப்படும்.

வழக்கு மாற்றப்பட்டது

பிப்ரவரி 8ம் தேதி அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் யாஸிட் மீதும் ஹலிமா மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஷா அலாம் உயர் நீதிமன்றத்திக்கு அந்த வழக்கை மாற்ற வேண்டியிருந்ததால் அவர்களுடைய வேண்டுகோள் (plea) எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

என்றாலும் அந்த வழக்கை விசாரிக்கக் கூடிய நீதிபதி யாரும் ஷா அலாமில் இல்லை என்றும் கோலாலம்பூரில் ஒருவரும் ஜோகூர் பாருவில் ஒருவரும் இருக்கின்றனர் என்றும் டிபிபி டுசுக்கி மொக்தார் கூறினார்.

பின்னர் அந்த வழக்கு கோலாலம்பூர் கிரிமினல் உயர் நீதிமன்றம் 2க்கு மாற்றப்பட்டது.

பிப்ரவரி 7ம் தேதி கைது செய்யப்படுவதற்கு முன்னர் அந்த நீதிமன்றம் அமைந்துள்ள வளாகத்தில் யாஸிட் சுவை பான விற்பனைக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.