நமக்கு இவ்வளவு பெருத்த பிரதமர்துறை தேவையா?

 “பிரதமர் துறையின் அளவும் ஆண்டுதோறும் அதற்கு செலவு செய்யப்படும் தொகையும் நம்மை திகைக்க வைக்கிறது.”

 

 

 

 

என்றும் வளரும் பிரதமர் துறை எடை குறைகிறது

எஸ்எம்சி: மற்ற அமைச்சர்களுடைய வேலைகளைச் செய்ய பிரதமர்துறையில் பல பிரிவுகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைத்துள்ள வேளையில் நமது அமைச்சரவையில் ஏன் இத்தனை அமைச்சர்கள் தேவை?

கேஎஸ்என்: பிரதமர் துறையின் அளவும் ஆண்டுதோறும் அதற்கு செலவு செய்யப்படும் தொகையும் நம்மை திகைக்க வைக்கிறது. அந்தக் காலத்தில் பிரதமர் துறையில் ஒரே ஒரு துறை மட்டுமே இருந்தது- அதுதான் பொருளாதாரத் திட்டப் பிரிவு.

அதன் பெயருக்கு ஏற்ப அது கருவூலத்துடன் இணைந்து எல்லா வளர்ச்சித் திட்டங்களுக்கும் திட்டமிட்டது. பிரதருக்கு ஆலோசனை கூற, தகவல் கொடுக்க, புள்ளி விவங்களை வழங்க கூட்டரசு அரசாங்க நிர்வாகம் முழுமையாக தயாராக இருந்தது.

பிரதமருக்கு அவை தொடர்ந்து கிடைத்தும் வந்தன. ஒர் அரசாங்கம் என்பது அப்படித்தான் நடத்தப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் பிரதமர் துறை அப்படித்தான் இருந்தது எனக்குக் கூறப்பட்டது. பொது நிதிகளைச் செலவு செய்து பிரதமர் துறையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில்  ஊழியர்கள் தேவையா? ஒரே வேலையைப் பலர்  செய்கின்றனரா? பிரதமர் தமது துறைக்கு ஏன் இவ்வளவு செலவாகிறது  என்பதை நியாயப்படுத்த வேண்டும். சரியா?

அடையாளம் இல்லாதவன்: பிரதமர் துறையின் அளவு முக்கியமான விஷயம் அல்ல. வேலைகளைச் செய்வதற்கு தகுதி உடைய மனிதர்கள் இருந்தால் அவர்களுக்கு  தகுந்த சம்பளம் கொடுங்கள்.

திறமையில்லாதவர்களை நீக்குங்கள். மற்றவர் கவனத்தை ஈர்க்காமல் பின்னணியில் வேலை செய்யும் இட்ரிஸ் ஜாலா போன்றவர்களே நமக்குத் தேவை.

அடையாளம் இல்லாதவன்பி: மக்களாகிய நாம் நமது வலிமையைக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பிரதமரிடம் இவ்வளவு அதிகாரம் குவிந்திருக்கும் வகையில் நமது அரசாங்க முறை அமைக்கப்படவே இல்லை.

நாட்டின் நிதி அமைச்சராகவும் பிரதமர் எப்படி இருக்க முடியும்? மூன்றாம் உலக “பூர்வகுடி”‘ மக்கள் வாழும் நாட்டில்தான் அது நடக்கும். உலகில் சிறந்த ஜனநாயக நாட்டில் அல்ல.

பிரதமரே நிதி அமைச்சராகவும் இருந்தால் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக யார் இருக்கப் போகின்றார்? அரசாங்கத் திட்டங்களின் நிதி, பொருளாதார சாத்தியம் பற்றி யார் மதிப்பீடு செய்யப் போகிறார்கள்?

அது மட்டுமல்ல. பிரதமர்துறை தொடர்ந்து பெருத்து வருகிறது. பொருளாதாரத்திற்கு திட்டமிடுதல், அமலாக்க ஒருங்கிணைப்பு, தனியார் மயம், தேசியப் பாதுகாப்பு, நிர்வாக நவீன மயம், பெமாண்டு, பெமுடா அனைத்துலக ஒப்பந்தங்கள், தேசிய ஒற்றுமை என பல பிரிவுகள் பிரதமர்துறையில் இயங்குகின்றன.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தொடங்கிய அந்த கெட்ட பழக்கத்திற்கு நாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

வீரா: நஜிப்பின் தந்தையும் முன்னாள் பிரதமருமான அப்துல் ரசாக் ஹுசேன் காலத்தில் வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு அதிக ஒதுக்கீடுகள் கொடுக்கப்படும். அது நல்ல விஷயம். ஏனெனில் நாம் எதிர்காலத்துக்கு முதலீடு செய்கிறோம். ஆனால் இன்று பிரதமர்துறையே அதிகமாகச் செலவு செய்கிறது.