ஷானாஸ் ஏ. மஜிட்டின் வழக்குரைஞர்கள் அவரின் முன்னாள் கணவர் சரவாக் முதலமைச்சரின் மகன் மஹமூட் அபு பெகிர் தாயிப் பராமரிப்புச் செலவாக ரிம902,,000-க்கு மேற்பட்ட ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும் என்ற இடைக்கால நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.
பிரிட்டனின் கல்வி பயிலும் அவர்களின் மகனின் தங்குமிடம், உணவு, படிப்பு முதலியவற்றுக்காகும் செலவுக்காக இப்பணம் கோரப்பட்டது.
கோலாலும்பூர் ஷியாரியா நீதிமன்றம் ஷானாஸின் மனுவை ஏற்று இந்த உத்தரவை விடுத்தது.
மஹ்மூட்(வலம்) இன்றிலிருந்து 12 நாள்களுக்குள் அப்பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி முகம்மட் அம்ரான் மாட் ஜைன் உத்தரவிட்டார்.
ஷானாஸும் மஹ்மூட்டும் 2011 மார்ச் 11-இல் மணவிலக்கு செய்துகொண்டனர்.