2007ம் ஆண்டு பெர்சே பேரணியின் போது சட்டவிரோதமான கூட்டத்தில் பங்கு கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மற்று 12 பேரை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
நீதிபதி ஜக்சித் சிங் பாந்த் சிங் வழங்கிய அந்தத் தீர்ப்பை பாஸ் கட்சியின் ஹாராக்கா நாளேடு இன்று வெளியிட்டது.
முகமட் ஹாரித் பாத்திலா ஷாபுதின், பாடாங் செராய் எம்பி என் கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலைந்து செல்ல மறுத்ததும் உட்பட்ட அந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டதாக சுவா அனுப்பிய டிவிட்டர் செய்தி கூறியது.