“1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பிபிஎஸ் மாநில அரசாங்கத்தை வீழ்த்துவதில் உதவுவதற்காக சபா கள்ளக் குடியேறிகளுக்கு ஆயிரக்கணக்கான அடையாளக் கார்டுகளை வழங்குவதில்” தாமும் தமது குழுவும் உதவி செய்ததாக முன்னாள் இசா கைதி ஒருவர் கூறிக் கொண்டுள்ளார்.
அடையாளக் கார்டு திட்டத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் 1995ம் ஆண்டு இசா சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்குத் தடுத்து வைக்கப்பட்ட 63 வயது சித்தி அமினா மாஹ்முட் கூறினார்.
அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் பேசினார். கள்ளக் குடியேறிகளுடைய அடையாளக் கார்டு விண்ணப்பங்களுக்கு தகவலகளை திரட்டும் பணியிலும் பெரும்பாலும் இந்தோனிசியர்களும் பிலிப்பினோக்களுமான அந்நியர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக சபா முழுவதும் உள்ள கிராமத் தலைவர்களிடம் வெளியிடப்பட்ட அடையாளக் கார்டுகளை வழங்குவதிலும் தாம் ஈடுபட்டிருந்ததை அவர் அப்போது நிருபர்களுக்கு விளக்கினார்.
சபாவை அம்னோ கைப்பற்றுவதற்கு உதவும் திட்டத்தின் ஒரு பகுதியாக அடையாளக் கார்டுகளை பரிசீலித்து வழங்குமாறு தமக்கு ஆணையிடப்பட்டதாகவும் அமினா சொன்னார்.