டாக்டர் மகாதீர்: இசா இல்லாததால் மக்கள் இப்போது பொய் சொல்ல அஞ்சுவதில்லை

mahaஇசா சட்டம் அகற்றப்பட்டது மக்கள் பொய்களை அள்ளி விடுவதற்கு வழி வகுத்து விட்டதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருதுகிறார்.

காரணம் சாத்தியமான தண்டனை இல்லாததால் மக்களுக்குத் துணிச்சல் வந்து விட்டது என அவர் சொன்னார்.

“இப்போது நாம் இசா சட்டத்தை ரத்துச் செய்து விட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் விருப்பம் போல் சுதந்திரமாக எல்லா வகையான பொய்களையும் சொல்கின்றனர், அடாவடித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்,” என அவர் 2020 இலட்சியத்தைக் குறிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். ஸ்ரீ கெம்பாங்கானில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

“2020 இலட்சியத்தை அடைவதற்கான இறுதிப் படி, நாம் அதனை அடைய முடியுமா ?”  என்னும் தலைப்பில் டாக்டர் மகாதீர் பேசினார். “அவர்கள் பிரச்னைகளை எதிர்நோக்காத போது இசா அவர்களுக்குத் தேவை இல்லை,” என அவர் வருத்தத்துடன் கூறினார்.

“ஆனால் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்நோக்கும் போது அவர்கள் மக்களைக் கைது செய்து குவாண்டானோமோ விரிகுடாவில் அடைப்பதற்கும் ஏன் மக்களைச் சித்தரவதை செய்வதற்கும் கூட அவர்கள் தயங்குவதில்லை,” என்றார் மகாதீர்.