பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர், யூகேஎம் என்ற மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அந்த பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை தவிர்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள Dewan Canselor Tun Abdul Razak மண்டபத்துக்கு வெளியில் 40 மாணவிகள் ரோஸ்மாவைக் கிண்டல் செய்யும் பதாதைகளை ஏந்திக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்.
“24 மில்லியன் ரிங்கிட் மோதிரத்துக்காக சேமிக்கிறேன்”, “ரோஸ்மா பிரதமராக வேண்டும் என நாங்கள் விடும்புகிறோம்”, “தேர்தல் தேதிகளை அறிவிக்குமாறு நஜிப்புக்கு அறிவரை கூறுங்கள்” எனக் கேட்டுக் கொள்ளும் வாசகங்கள் அந்தப் பதாதைகளில் எழுதப்பட்டிருந்தன.
என்றாலும் ரோஸ்மாவை கவனித்துக் கொண்டவர்கள் அவர் வேறு வழியாக இன்னொரு காரில் புறப்படுவதை உறுதி செய்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ரோஸ்மா குழுவின் நடவடிக்கை தங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதாக அந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்த Ikatan Studi Islam UKM (ISIUKM) அமைப்பு தெரிவித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை ஒரத்தில் பதாதைகளை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். ஏன் ரோஸ்மா அப்படி வேறு வழியாகச் செல்ல வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர் முகமட் அஸான் சபார் வினவினார்.
“அவர்கள் ஏன் எங்களைப் பார்த்து பயப்பட வேண்டும் ? நாங்கள் அவர்களை நிறுத்த முயற்சி செய்யவில்லை. நாங்கள் பதாதைகளை மட்டுமே வைத்திருந்தோம்,” என்றார் அவர்.
“ஆனால் அவர்கள் கார்களை மாற்றியதைப் பார்க்கும் போது உண்மையில் அவர்கள் மாணவர்களைக் கண்டு அஞ்சுவதாகத் தெரிகிறது.”
யூகேம் பாதுகாவலர்கள் அஸ்பிரசி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் கலைந்து செல்லுமாறு எங்களை வற்புறுத்தியதாக அவர் சொன்னார்.
என்றாலும் மாணவர்கள் ரோஸ்மா 4 மணிக்குப் புறப்பட்ட பின்னர் 75 நிமிடங்களுக்கு அங்கு இருந்தனர்.