பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையை விவாதிக்க சிலாங்கூர் பிஎன் தயார் ஆனால்…

zinகடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பக்காத்தான் ராக்யாட் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை அறிக்கையை விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் கூறியிருக்கிறார். ஆனால் ஒரு நிபந்தனை விதிப்பதாக அவர் சொன்னார்.

“நான் விவாதம் நடத்தத் தயார். ஆனால் மக்கள் நலனை பாதுகாக்கும் ஆற்றலைக் கொண்ட, மேலும் தகுதியான தனது தேர்தல் கொள்கை அறிக்கையை பிஎன் வெளியிடும் வரை காத்திருங்கள்.”

“சிலாங்கூர் பிஎன் தனது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிடும். ஆனால் உயர்நிலைத் தலைமைத்துவம் தனது முக்கிய தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்ட பின்னரே அது நிகழும்,” என அவர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

விவாதம் நடத்த வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு பக்காத்தான் விடுத்துள்ள சவாலுக்கு முகமட் ஜின் பதில் அளித்ததாக உத்துசான் மலேசியா நாளேடு கூறியது.

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் சாத்தியமானதா எனப் பிஎன் தலைவர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் தெரிவிப்பதற்கு பொது விவாதத்தை நடத்த வருமாறு பிஎன் தலைவர்களுக்கு பக்காத்தான் சவால் விடுத்தது.