தைவானிய சுற்றுச்சூழல் போராளி மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை

Ganதைவானிய சுற்றுச்சூழல் போராளி மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் இன்று பின்னேரத்தில் திருப்பி அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஜுலை மாதம் ரபிட் எதிர்ப்பு இயக்கத்துக்காக ஜோகூர் பெங்கெராங் சென்றிருந்த கிரேஸ் கான் என்ற அந்தப் போராளியை தற்போது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

லங்காவியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென் கிழக்காசிய கடல் வாழ் உயிரினங்கள் மீதான ஆய்வரங்கில் (Seamam III) கலந்து கொள்வதற்காக கான் நேற்றிரவு மணி 10.30க்கு விமானம் நிலையம் வந்தடைந்ததாக மலேசியாகினியிடம் சில வட்டாரங்கள் தெரிவித்தன.

என்றாலும் அவரை அங்கு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் உடனடியாக தடுத்து வைத்தனர். கடந்த ஆண்டு அவர் இங்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அவரது பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படது.Gan1

கான் -உடைய கைத் தொலைபேசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்துள்ள போதிலும் தாம் தடுப்புக் காவலில் நன்றாக நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவர் இன்று பின்னேரத்தில் தைவானுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இரண்டாவது அந்நியப் போராளி கான் ஆவார். கடந்த மாதம் ஆஸ்திரேலிய செனட்டரான நிக் செனபோன், ‘நாட்டின் எதிரி’ எனக் கூறப்பட்ட பின்னர் 15 மணி நேரம் குறைந்த கட்டண விமான முனையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டார்.