‘அமெரிக்காவில் அன்வார் எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பிஎன் நிதி அளித்தது

APCOமுக்கிய அமெரிக்க வெளியீடுகளில் பிரச்சார கட்டுரைகளை எழுதுவதற்காக பல எழுத்தாளர்களுக்கு பிஎன் பணம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய ஏஜண்டுகள் தங்களைக் கட்டாயம் பதிந்து கொள்ள வேண்டும் என்ற அமெரிக்கச் சட்டத்தின் கீழ் ஜோசுவா டிரெவினோ என்ற பழமைவாதி பிப்ரவரி 24ம் தேதி சமர்பித்த தகவல்களில் அந்த விவரம் அடங்கியுள்ளது.

அமெரிக்க நீதித் துறையிம் அந்நிய ஏஜண்டுகள் பதிவுச் சட்ட இணையத் தளத்தில் அந்த ஆவணம் சேர்க்கப்பட்டுள்ளது.

Apco Worldwide, David All Group, FBC Media ஆகிய பொது உறவு அமைப்புக்கள் 2008 மே மாதத்திற்கும் இடையில் 2011 ஏப்ரல் மாதத்திற்கும் இடையில்  டிரெவினோவை கட்டுரை எழுதுவதற்கு அமர்த்தியதாக ஏழு பக்கங்களைக் கொண்ட அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசிய அரசாங்கம், அதனுடன் அணுக்கமாக உள்ள அமைப்புக்கள்” ஆகியவற்றின் சார்பில் அவர் செயல்பட வேண்டும் என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பாகும்.”

அவருக்கு அவரது வேலைகளுக்காக மொத்தம் 389,724.70 அமெரிக்க டாலர் (1.2 மில்லியன் ரிங்கிட்) கொடுக்கப்பட்டது. அவர் கோலாலம்பூருக்கு ஒரு முறை சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

malaysiamatters.com, malaysiawatcher.com, போன்ற தற்போது செயல்படாத இணையத் தளங்களில் வலைப்பதிவுகளைச் செய்வதும் மற்ற 10 எழுத்தாளர்களுடைய கருத்துக்களை வெளியிட ஏற்பாடு செய்வதும்  அவருக்கு வழங்கப்பட்ட பணிகளாகும்.

என்றாலும் எழுத்தாளர்களுக்கு சுதந்திரமாக எழுதுவதற்கு உரிமை இருந்தது என்றும் தங்கள் எழுத்துக்களை வெளியிடுவதற்கு முன்னர், வாடிக்கையாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் டிரெவினோ கூறிக் கொண்டார்.

ஏற்கனவே இந்த விஷயம் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட செய்தி இணையத் தளமான BuzzFeed வெளிவந்துள்ளது. மலேசிய அதிகாரிகளுடனான தமது நிதி உறவுகளை வெளியிடத் தவறியதற்காக கார்டியன் என்ற பிரிட்டிஷ் நாளேட்டிலும் Huffington Post என்ற அமெரிக்க ஏட்டிலும் கட்டுரைகளையும்

வலைப்பதிவுகளையும் வெளியிடுவதற்கான ஒப்பந்த உரிமைகளை டிரெவினோ இழந்தார்.