லஹாட் டத்துவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையின் போது கொல்லப்பட்ட இரண்டு போலீஸ் மின்னல் படை வீரர்களுடைய சடலங்கள் இன்று தீவகற்ப மலேசியாவுக்கு தவாவ் நகரிலிருந்து கொண்டு செல்லப்பட்டன.
பிலிப்பின்ஸில் உள்ள சுலு சுல்தான் ‘இராணுவத்தைச் சார்ந்தவர்கள்’ எனக் கூறிக் கொண்ட அந்த ஊடுருவல்காரர்களுடன் நிகழ்ந்த சண்டையில் அவர்கள் உயிரிழந்தார்கள்.
பொது நடவடிக்கைப் படையின் உலு கிந்தா முகாமைச் சேர்ந்த 29 வயதான இன்ஸ்பெக்டர் சுல்கிப்லி மாமாட், 46 வயது கார்ப்பரெல் சபாருடின் டாவுட் ஆகியோர் கொல்லப்பட்ட மின்னல் படை வீரர்கள் ஆவர்.
சுல்கிப்லியின் நல்லுடல் திரங்கானு பெசுட்டில் உள்ள கம்போங் குபாங் ஈக்கானில் அடக்கம் செய்யப்படும்.
சபாரிடினுடைய நல்லுடல் சிலாங்கூர் சபா பெர்ணாமில் உள்ள சுங்கை லியாஸில் அடக்கம் செய்யப்படும்.
அந்தத் துப்பாக்கிச் சண்டையில் 32 வயது கார்ப்பரெல் முகமட் தார்மிஸி ஹஷிம், 39 வயது கார்ப்பரெல் அஸ்மான் அம்போங், 22 வயது கான்ஸ்டபிள் முகமட் கயூம் அய்க்கல் ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்கள் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.