ஜெனரல்: ஊடுருவல்காரர்கள் நன்கு ‘பயிற்சி-பெற்றவர்கள்’

1gunfight

சாபாவில் ஊடுருவல் செய்துள்ள ஆயுதங்தாங்கிய கும்பல் போரிடும் அனுபவம் உள்ளது என்றும் ஊடுருவல் தந்திரங்கள் அறிந்தது என்றும் கூறுகிறார் இராணுவ ஜெனரல் சுல்கிப்ளி சைனல் அபிடின்.

1general“அவர்களின்  செயல்பாட்டைக் கண்காணித்ததிலும் எங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவல்களிலிருந்தும் போரிடும் அனுபவம் அவர்களுண்டு  என்பது புலனாகிறது.  தலைமறைவுப் படையினரின் போர்முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் தெரிகிறது”, என்றாரவர்.

வெட்டவெளியாக உள்ள ஓர்  இடத்தில் அக்கும்பல் குறிபார்த்து சுடுவோரை நிறுத்தி வைத்திருப்பதாக  அவர் தெரிவித்தார். ஆனால், அது எந்த இடம் என்பதைத் தெரிவிக்கவில்லை.

“அந்த வெட்டவெளியைத் தாண்டிச் செல்ல முற்பட்டால் நம் பக்கம் சேதம் உண்டாவதைத் தவிர்க்க  இயலாது என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள்”.  லாஹாட் டத்து, பெல்டா சஹாபாட்டில் செய்தியாளர் கூட்டமொன்றில் ஜெனரல் பேசினார்.

அதுவே மூன்று வாரங்களுக்குமுன் கம்போங் தண்டோவில் ஆயுதக்கும்பல் வந்திறங்கிய பின்னர் போலீசும் இராணுவமும் சேர்ந்து நடத்தும் முதலாவது செய்தியாளர் கூட்டமாகும்.

குனாக்கில் இன்னொரு ஆயுதக்கும்பல் வந்திறங்கி, செம்பூர்னாவில் போலீஸ் குழு ஒன்று திடீர்தாக்குதலுக்கு இலக்கானதை அடுத்து இக்கூட்டுச் செய்தியாளர் கூட்டம் கூட்டப்பட்டது.

கம்போங் ஸ்ரீஜெயா சிமுனுலுலிலும் லாஹாட் டத்துவிலும் பாதுகாப்புப் படையினருடன் மோதியவர்கள் ஒரே குமப்லைச் சேர்ந்தவர்கள்தானா  என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.