நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலவன்ஸ் மற்றும் சலுகைகளை அதிகரிப்பதற்குச் செய்யப்பட்ட பரிந்துரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாற்றரசுக் கட்சியினர் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
எனவே, அதைத் தாம் மீட்டுக்கொண்டதாக நஸ்ரி நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2012 பட்ஜெட், எம்பிகளின் பொறுப்பை அங்கீகரித்து அவர்களின் அலவன்சுகள் அதிகரிக்கப்படுவதற்குப் பரிந்துரைத்தது.