ஹம்சா: எதிரிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர், உணவு விநியோகம் தடுக்கப்பட்டுள்ளது

hamzaதென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த ஊடுருவல்காரர்களுக்கு உணவுப் பொருளும் ஆயுதங்களும் கிடைக்காமல் தடுப்பதற்கு பாதுகாப்புப் படைகள் எல்ல கடல், தரை வழிகளையும் அடைத்து விட்டன.

கம்போங் தண்டுவோ, கம்போங் தஞ்சோங் பத்து ஆகியவற்றுக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் முயன்ற பல ஊடுருவல்காரர்களை போலீசாரும் ஆயுதப்படைகளும் கடற்படையும் சிறைப் பிடித்துள்ளதாக சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் சொன்னார்.

“நாங்கள் கடலில் கடற்படையின் உதவியுடனும் தரையில் ஆயுதப்படைகளின் உதவியுடனும் அந்த பகுதியைச் சுற்றிலும் இறுக்கமான வளையத்தை அமைத்துள்ளோம்.”

“உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு முயன்ற பல ஊடுருவல்காரர்களை நாங்கள் பிடித்திருப்பதால் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது.”

ஹம்சா டிவி3 தொலைக்காட்சி நிலையத்தின் மலேசியா ஹரி இனி நிகழ்ச்சிக்கு இன்று நேரடியாக பேட்டி அளித்த போது அந்த விவரங்களை கூறினார்.

“பிப்ரவரி 12ம் தேதி ஊடுருவல் தொடங்கியது. அதனை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடந்த வெள்ளிக் கிழமை தொடக்கம் எட்டு மலேசிய போலீஸ் அதிகாரிகளும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.”

hamza1ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் பொதுமக்களுடன் கலந்து விட்டதாக கூறப்படுவது பற்றிக் குறிப்பிட்ட ஹம்சா, அந்த சாத்தியத்தை அதிகாரிகள் மறுக்கவில்லை எனச் சொன்னார்.

என்றாலும் தாக்குதல் நடத்தும் முன்னர் கம்போங் தஞ்சோங் பத்து சுற்றி வளைக்கப்பட்டு அங்கு கிராமவாசிகள் யாரும் இல்லாதது உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“வெளியேறுவதற்கு வழி இருந்தாலும் அது கடல் வழியாகத் தான் முடியும். என்றாலும் நாம் மனிதர்களைக் கையாளுவதால் சவால்கள் இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவர்களிடம் சில தந்திரங்கள் இருக்கலாம்,” என்றார் அவர்.

செம்போர்ணா கம்போங் சிமுனுலில் நிகழ்ந்த மறைவுத் தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட நால்வர் பற்றிக் குறிப்பிட்ட ஹம்சா, அவர்கள் அந்தச் சம்பவத்துடன் தொடர்ப்புடையவர்கள் என நம்பப்படுவதாகத் தெரிவித்தார்.

என்றாலும் எந்த அளவுக்கு அவர்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை  என்றார் அவர்.

-பெர்னாமா