சபா சதி குறித்த புலனாய்வை மணிலா தொடங்கியுள்ளது

manilaசபா பாதுகாப்பு நெருக்கடிக்கு பின்னணி எனக் கூறப்படும் சதித் திட்டம் பற்றிய புலனாய்வை பிலிப்பின்ஸ் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

செவ்வாய்க் கிழமை காலை விசாரணைக்கு வருமாறு சுல் சுல்தான் ஆலோசகர் Pastor ‘Boy’ Saycon-னை பிலிப்பின்ஸ் தேசியப் புலனாய்வுத் துறை அழைத்துள்ளதாக அந்த நாட்டில் செய்தி இணையத் தளமான PhilStar கூறியது.

இதனிடையே அந்த சதித் திட்டம் பற்றி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அதிபர் மூன்றாவது பெனிக்னோ அக்கினோ விளக்குவார் என அவருடைய பேச்சாளர் எட்வின் லாசியர்டா கூறினார்.

அக்கினோ ‘கும்பல் தலைவர்கள் பற்றியும் ஏமாற்றப்பட்டவர்கள் பற்றியும்’ மலேசியப் பிரதமருக்கு தெரிவிப்பார் என அவர் சொன்னார்.

“அந்த சுலு சுல்தான் படையில் உள்ள சிலருக்கு 600 அமெரிக்க டாலர் கொடுக்கப்பட்டது என்றும் சிலருக்கு 600 டாலர் வாக்குறுதி அளிக்கப்பட்டது என்றும் சிலருக்கு நிலமும் பதவிகளும் வாக்குறுதி அளிக்கப்பட்டது என்றும் கூறும் ஊடகத் தகவல்களையும் நாங்கள் பெற்றுள்ளோம்.”manila1

இதனிடையே சுல்தானுடைய ஆதரவாளர்களுக்கு பணமும் பதவியும் கொடுக்கப்படும் என ஆசை வார்த்தை காட்டப்பட்டதாக கூறப்படுவதை தம்மை சுலு சுல்தான் எனச் சுயமாக பிரகடனம் செய்து கொண்டுள்ள மூன்றாவது ஜமாலுல் கிராமின் பேச்சாளர் அபரஹாம் இட்ஜிரானி மறுத்துள்ளார்.

ஜமாலுல் வயதானவர் என்பதால் வழக்குத் தொடரப்படுவதிலிருந்து ஜமாலுல் தப்பிக்க முயலமாட்டார் என்றும் அவர் சொன்னார்.

போரைத் தூண்டியது சட்டவிரோதமாக சுடும் ஆயுதங்களை வைத்திருந்தது போன்ற பல குற்றச்சாட்டுக்களை ஜமாலுலும் அவரது ஆதரவாளர்களும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பிலிப்பின்ஸ் அரசாங்கம் ஏற்கனவே எச்சரித்துள்ளதாகவும் அந்த செய்தி இணையத் தளம் குறிப்பிட்டது.