லிம் குவான் எங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானது

protest‘அல்லாஹ்’ விவகாரம் மீது பல அரசு சாரா அமைப்புக்கள் வெள்ளிக் கிழமை நடத்திய ஆர்ப்பாட்டம் சட்ட விரோதமானது எனப் போலீசார் அறிவித்துள்ளனர்.

அந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில அரசாங்கப் பேராளர்களும் பட்டாணி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரரும் புகார் செய்துள்ளதை ஜார்ஜ் டவுன் ஒசொபிடி கான் கொங் மெங் உறுதிப்படுத்தினார்.

போலீஸ் அனுமதி இல்லாமல் கூடியதாக அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ் அந்த விவகாரம் புலனாய்வு செய்யப்படும் என அவர் சொன்னார்.

அந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொறுப்பான அமைப்புக்களையும் தனிநபர்களையும் போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை என கான் தெரிவித்தார்.

முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் நேரம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் அவருக்கு கறுப்பு நிற சுவர்க் கடிகாரம் ஒன்றை வழங்கும் பொருட்டு சூலியா ஸ்டீரிட்டில் உள்ள பெங்காளி பள்ளிவாசலிலிருந்து வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பின்னர் 50 பேர் கொம்தார் கட்டிடத்திற்கு ஊர்வலமாக நடந்து சென்றார்கள்.protest1

அவர்கள் லிம்-மீது வசை பாடியதுடன் கொம்தாரில் பூட்டப்பட்டிருந்த மாநில அரசாங்க அலுவலகத்தின் கண்ணாடிக் கதவுகளையும் குத்தினர். அந்தச் சம்பவம் காரணமாக பினாங்கு ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

“அடாவடித்தனமான சூழ்நிலை பற்றிய தகவல் கிடைத்ததும் பட்டாணி போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் அங்கு அனுப்பப்பட்டனர். மகஜரைக் கொடுத்த பின்னர் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களைப் போலீசார் கேட்டுக் கொண்டனர்,” என்றும் கான் தெரிவித்தார்.
 
சபா, லஹாட் டத்து ஆயுதமேந்திய நெருக்கடிக்குப் பின்னணியில் அம்னோ இருப்பதாக கூறும் அறிக்கையை வெளியிட்டதாகச் சொல்லப்படும் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா-வுக்கு எதிராகவும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இருபது நிமிடங்களுக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் அந்தக் கடிகாரத்தை கதவில் விட்டுச் சென்றார்கள்.

protest2கடந்த வியாழக்கிழமையன்று இன்னொரு அமைப்பு லிம்-முக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது. ‘அல்லாஹ்’  என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதாரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கடந்த கிறிஸ்துமஸின் போது விடுத்த அறிக்கையை லிம் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியது.

மலாய் மெயில்