சபாவில் போலீஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து அங்கிருந்து பிலிப்பினோக்கள் வெளியேறுகின்றனர்

sabahசபா செம்போர்ணாவிலிருந்து பிள்ளைகள் உட்பட 57 பிலிப்பினோக்கள்  சிறிய படகுகள் மூலம் நேற்று பிலிப்பின்ஸில் உள்ள தாவி தாவி தீவுகளைச் சென்றடைந்தனர். மலேசியப் பாதுகாப்புப் படைகள் தங்களை விரட்டியதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.

ஞாயிற்றுக் கிழமை இரவு எட்டு மணி வாக்கில் தாங்கள் செம்போர்ணாவிலிருந்து புறப்பட்டதாகவும் ஒர் இரவு முழுவதும் பயணம் செய்த பின்னர் திங்கட்கிழமை காலை தாங்கள் தாவி தாவி தீவுக் கூட்டத்தில் கடைசித் தீவான சித்தாங்கே-யை சென்றடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

சுலு சுல்தான் ஆதரவாளர்களுக்கும் மலேசிய ஆயுதப் படைகளுக்கும் இடையில் சண்டை மூண்ட பின்னர் செம்போர்ணாவில் ஆறு மலேசிய போலீஸ் அதிகாரிகளும் ஆறு பிலிப்பினோக்களும் செம்போர்ணாவில் கொல்லப்பட்டனர்.sabah1

ஆவணங்கள் ஏதுமில்லாத பிலிப்பினோக்களையும் சுலு சுல்தானுக்கு ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களையும் மலேசிய அதிகாரிகள் கைது செய்து வருவதால் தாங்கள் மறைந்து வாழ்ந்ததாகவும் அவர்கள் தாவி தாவியில் உள்ள பிலிப்பின்ஸ் பணிப்படையிடம் கூறினர்.

சபாவில் நிகழும் சண்டையிலிருந்து தப்பிப்பதற்காக பிலிப்பின்ஸுக்குத் திரும்பும் பிலிப்பினோக்கள் பிரச்னைகளைக் கவனிப்பதற்காக அந்த பணிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இண்டர் அக்சன்