பிலிப்பின்ஸ் கடற்படை ஆயுதமேந்திய 35 சுலுக்களை தடுத்து வைத்துள்ளது

ghafir1சுலு சுல்தான் ஆதரவாளர்கள் என நம்பப்படும் 35 பேரிடமிருந்து சுடும் ஆயுதங்களையும் ரவைகளையும்பிலிப்பின்ஸ் கடற்படை கைப்பற்றியுள்ளது.

தாவி தாவி தீவுக் கூட்டத்தில் உள்ள அண்டோலிங்கான் தீவுக்கு அருகில் உள்ள கடலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பிலிப்பின்ஸ் கடற்படை பேச்சாளர் சொன்னார்.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் மாது ஒருவரும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இரண்டு படகுகள் மூலம் அவர்கள் அந்தத் தீவை அடைந்ததாக நம்பப்படுகின்றது.

அந்த இரண்டு படகுகளில் ஒன்று சபாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்குக் கொண்டு செல்லப்படுவர் என அவர் மேலும் சொன்னார்.

மலேசியப் பாதுகாப்புப் படைகளுடன் இந்த மாதத் தொடக்கத்தில் பகைமை நடவடிக்கைகள் தொடங்கிய பின்னர் சுலு சுல்தான் ஆதரவாளர்களுக்கு உதவிப் படைகளை அனுப்ப தாவ்சுக் பிரிவினர் செல்வதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபாவில் உள்ள சுலு சுல்தான் ஆதரவாளர்களுடன் உதவிப் படையினர் இணைந்து கொள்வதைத் தடுக்க பிலிப்பின்ஸும் மலேசியாவும் கடல் தடுப்புக்களை அமைத்துள்ளன.

இதற்கு முன்னர் சபாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த 70க்கும் மேற்பட்ட சுலு சுல்தான் ஆதரவாளர்களைத் தாங்கள் தடுத்துள்ளதாக பிலிப்பின்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இண்டர்அக்சன்