அன்றாட வாழ்க்கை முறைகளில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தியர்களை தற்போது அதிகமாக பாதிக்க கூடிய நோய்களாக நீரழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் காணப்படுவதாக கூறுகிறார் மருத்துவர் ம. சண்முக சிவா.
இந்த இரு நோய்களும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக கூறும் அவர், சிலருக்கு பரம்பரை கூறுகள் உள்ளது, பலருக்கு பழக்க வழக்கங்களால் ஏற்படக்கூடிய நோயாக உள்ளது என்றார்.
பெற்றோருக்கு நீரழிவு நோய் அல்லது இரத்த அழுத்தமோ இருக்கும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்து அந்நோய்கள் குறித்த விழிப்புணர்வை வழங்கவேண்டும். குறிப்பாக உணவு, உடல், ஆரோக்கியம் குறித்த சரியான விழிப்புணர்வு எல்லாக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் சண்முக சிவா.
செம்பருத்தி இணையத்தளத்தில் தற்போது காணொளி வழி புதிய அங்கமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ‘அன்புள்ள டாக்டர்’ பகுதிக்கு வழங்கிய மருத்துவ ஆலோசனையின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்
நீங்களும் உங்கள் மனதில் எழும் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பி வைக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு காணொளி வழி மருத்துவர் சண்முக சிவா விளக்கமளிப்பார்.