ஆர்சிஐ-யின் தொடக்கக் கண்டுபிடிப்புக்கள் மீது கருத்துச் சொல்வது தவறாகும்

passportசபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் தொடக்க விசாரணைகளில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் மீது முடிவுகளைச் செய்வதும் கருத்துச் சொல்வதும் தவறு  (Sub judice) என சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார்.

அச்சு ஊடகங்கள் வழியாகவும் மின்னியல் ஊடகங்கள் வழியாகவும் நடத்தப்படும் ‘வழக்கு விசாரணையில்’ எல்லாத் தரப்புக்களும் சம்பந்தப்படுவதிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்  என அவர் சொன்னதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.

“அத்தகைய நடவடிக்கைகள் தவறு  (Sub judice),” என கனி கோலாலம்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

மார்ச் 21ம் தேதி முடிவடையவிருந்த ஆர்சிஐ-யின் தவணைக் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆர்சிஐ தனது விசாரணைகளை முடித்துக் கொண்டு அறிக்கை தயாரிப்பதற்கு உதவியாக அந்த நீட்டிப்பை அகோங் வழங்கியுள்ளதாக ஆர்சிஐ செயலாளர் சரிபுடின் காசிம் கூறினார்.pass1

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி ஆர்சிஐ அமைக்கப்பட்டது. தனது விசாரணைகளை அது முடித்துக் கொள்வதற்கு ஆறு மாத அவகாசம் அதற்குக் கொடுக்கப்பட்டது.

மார் 18ம் தேதி அதன் அடுத்த விசாரணை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 21ம் தேதி பொது விசாரணைகள் தொடங்கின. இது வரையில் 62 பேர் சாட்சியமளித்துள்ளனர். இன்னும்  பலர் சாட்சியமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆர்சிஐ-க்கு முன்னாள் சபா, சரவாக் தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம் தலைமை ஏற்றுள்ளார்.

pass2சபாவில் நீல நிற அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்ட அந்நியர்கள் எண்ணிக்கை, அவை சட்டப்பூர்வமாகக் கொடுக்கப்பட்டதா இல்லையா, சம்பந்தப்பட்டவர்கள் சபா வாக்காளர் பட்டியைலில் உள்ளனரா என்பதை விசாரிப்பது உட்பட எட்டுப் பணிகள் ஆர்சிஐ-க்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சபா மக்கள் தொகை திடீரென அதிகரித்தது பற்றியும் அதனால் மாநிலத்தில் ஏற்பட்ட சமூக தாக்கங்களையும் ஆய்வு செய்வதும் நாடற்ற அந்நியர்கள் எண்ணிக்கையை அடையாளம் காண்பதும் அதன் கடமைகளில் அடங்கும்.