பொதுத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சிகள் பற்றிய ஆதாரத்தை துணைப் பிரதமர் இப்போது காட்ட மாட்டார்

muhai“ஒழுங்கைச் சீர்குலைத்து எதிர்வரும் தேர்தலுக்கு இடையூறு” செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தாம்  தெரிவித்துள்ள குற்றச்சாட்டு மீதான ஆவண ஆதாரங்களை காட்டவோ அல்லது அது குறித்து விவரிக்கவே துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மறுத்து விட்டார்.

“சரியான நேரம் வரும் வரையில் காத்திருங்கள்” என அவர் சொன்னார்.

தமது குற்றச்சாட்டுக்கு ஆதரவாக ஆதாரங்களைத் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது முஹைடின்  அவ்வாறு தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் இன்று 12 தேசிய இலக்கியவாதிகளுடைய பெயர்களை அறிவித்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

வரும் 13வது பொதுத் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்கு இடையூறு செய்வதற்காக நாட்டை குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாக கடந்த புதன் கிழமை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கடந்த புதன் கிழமை குற்றம் சாட்டியிருந்தார்.

“நம்பத்தகுந்த ஆவணங்களிலிருந்து” அந்தத் தகவல் பெறப்பட்டதாக முஹைடின் சொன்னார் என பெர்னாமா தெரிவித்தது.

ஆளும் பிஎன் கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதால் பக்காத்தான் ராக்யாட் அதிர்ச்சி அடைந்துள்ளதே அதற்குக் காரணம் என்றும் அவர் சொல்லிக் கொண்டார்.

“பிகேஆர் ஆலோசமர் அன்வார் இப்ராஹிம் தாம் தேர்தலில் தோல்வி கண்டால் அதற்கு தேர்தல் ஆணையம் செய்துள்ள தில்லுமுல்லு காரணம் என்பார்.”

“அவர் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையம் மோசடி செய்ததாக அவர் சொல்லவே மாட்டார். தாம் தோல்வி காண்பதாக அவர் உணர்ந்தாலும் பிரதமராகும் தமது கனவு நிறைவேறவில்லை என்றாலும் அவர் அந்த ஆரூடத்தைச் சொல்லத் தொடங்கி விடுவார்,” என முஹைடின் உலு சிலாங்கூரில் சொன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளன.