ரௌடிக் கும்பல் தியான் சுவா சென்ற காரைத் தாக்கியது, ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்

Rowdy1பல்வேறு வலச்சாரி அரசு சாரா அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் எனக் கூறிக் கொண்ட 50 பேரடங்கிய கும்பல் ஒன்று பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா-வை ஏற்றியிருந்த காரை நேற்றிரவு தாக்கியது.

நேற்றிரவு மணி 11.15 வாக்கில் பினாங்கு சீனர் நகர மண்டபத்திலிருந்து தியான் சுவா புறப்பட்ட போது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ஜாலான் மஸ்ஜித் கெப்பிட்டான் கெலிங் சாலையில் அமைந்துள்ள அந்த நகர மண்டபத்தில் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் தியான் சுவா உரையாற்றினார்.

அவர் அந்த இடத்திலிருந்து புறப்பட்ட போது அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் காரை உதைத்துடன் கண்ணாடிகளையும் குத்தினர். தலைக்கவசங்களையும் கனிம நீர் போத்தல்களையும் வீசியதுடன் வசைச் சொற்களையும் கூறினர்.Rowdy

“தியான் சுவா எங்கே ? தியான் சுவா நாட்டின் எதிரி !” என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர். “என் நண்பர் ஒருவர் லஹாட் டத்துவில் உயிரிழந்தார்” என அவர்களில் சிலர் உரத்த குரலில் தெரிவித்தனர்.

தியான் சுவாவுடன் தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் பினாங்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். “நான் இங்கு இருக்க முடியாது. எதிர்ப்பைத் தவிர்க்க வேண்டும்” என குறுஞ்செய்தி அனுப்பினார்.

Rowdy2அதற்கு முன்னதாக விருந்தில் பேசிய தியான் சுவா, தமக்கு எதிராக தேச நிந்தனைக் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு அரசாங்க எந்திரத்தை பிஎன் பயன்படுத்துகிறது என்றும் “தேச நிந்தனை கருத்துக்களை தெரிவிக்கின்ற பெர்க்காசா தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் சொன்னார்.

“அவர்கள் என்னை எங்கு வேண்டுமானலும் விரட்டலாம். குழப்பத்தை ஏற்படுத்தலாம். நான் போலீஸ் படையை     அவமானப்படுத்தியதாகச் சொல்வது முழுக்க முழுக்க ஜோடனை,” எனத் தொடர்ந்து கூறிய அவர், சபா சுலு இழுபறியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளது என்ற அறிக்கையை தாம் மீட்டுக் கொள்ளப் போவதில்லை எனத்  தெரிவித்தார். அந்த இழுபறியில் பலர் உயிரிழந்தனர்.

போலீஸ் காவல் கடுமையாக இருந்தது

அந்தக் கும்பல் இரவு எட்டு மணி முதல் தியான் சுவாவுக்காக காத்திருந்தது. இரவு 10 மணி வாக்கில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த பத்து எம்பி-யான தியான் சுவா-வை எதிர்கொள்ள முடியவில்லை. காரணம் அந்த இடத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய போலீஸ் அனுமதிக்கவில்லை.Rowdy3

போலீஸ் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 20 அதிகாரிகளும் கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 20 வீரர்களும் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தியான் சுவா புறப்பட்ட பின்னர் ஜார்ஜ் டவுன் ஒசிபிடி கான் கோன் மெங் கூட்டத்தினர் கலைந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.

போலீஸ்காரர்கள் தங்கள் கடமையைச் செய்வதிலிருந்து தடுக்க முயன்றதற்காக கொம்தார் வணிகரும் போராளியுமான முகமட் கனி ஜிமான் குற்றவியல் சட்டத்தின் 186வது பிரிவின் கீழ் கைது  செய்யப்பட்டுள்ளதாக  அவர் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

“நாங்கள் போலீஸ் புகார் செய்வோம். அடுத்து விசாரிப்போம். எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம்,”  என கான் தெரிவித்தார்.

Rowdy4அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் 91வது பிரிவின் கீழ் அந்த சட்டவிரோதக் கூட்டம் விசாரிக்கப்படும்  என்றும் அவர் சொன்னார்.

அவர்கள் எம்பி-யின் காரை தலைக்கவசத்தையும் போத்தல்களையும் கொண்டு  தாக்கிய போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வினவப்பட்ட போது,” அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் நாங்கள் கைது செய்ய முடியாது. நாங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என கான் தெரிவித்தார்.

“நாங்கள் கூட்டத்தை முன் கூட்டியே கலைத்திருந்தால் அது உங்களையும் என்னையும் கூடப் பாதித்திருக்கும்,”  என நிலைமை அமைதியான பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். ஒன்று கூடுவதற்கு

ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்பதை மதிக்க வேண்டும் என்றார் அவர்.

போலீஸ்காரர்கள் கேட்டுக் கொண்ட பின்னர் இரவு மணி 11.20 வாக்கில் கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.