நஜிப் 2 ஆவது எஸ்டி-யைத் தயாரிக்க எப்ராஹாமுக்கு உத்தரவிட்டார் (விரிவாக)

1barதனியார் துப்பறிவாளர்(பிஐ) பி.பாலசுப்ரமணியம் செய்த இரண்டாவது சத்திய பிரமாணத்தை(எஸ்டி) வழக்குரைஞர் சிசில் எப்ராஹம் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.  பிரதமரின் உத்தரவின்பேரில் அவ்வாறு  செய்ததை அவரே தம்மிடம் தெரிவித்ததாக வழக்குரைஞர் அமெரிக் சிங் சித்து கூறினார்.

காலஞ்சென்ற பாலசுப்ரமணியத்தின் வழக்குரைஞரான அமெரிக், இன்று கோலாலும்பூரில் நடைபெற்ற மலேசிய  வழக்குரைஞர் மன்ற ஆண்டுக்கூட்டத்தில்(ஏஜிஎம்) இத்தகவலை வெளியிட்டார்

ஏஜிஎம்-மில் இரண்டாவது எஸ்டியைத் தயாரித்துக் கொடுத்தவரைக் கண்டறிய ஒரு தனிக் குழுவை அமைக்க  வேண்டும் என்ற தீர்மானத்தின்மீது விவாதம் நடந்துகொண்டிருந்தபோது அவர்  இத்தகவலை வெளியிட்டார்.

“சிசிலைச் சந்தித்தபோது, பாலாவுக்குத் தெரியாமலேயே இரண்டாவது எஸ்டியை வரைந்ததை ஒப்புக்கொண்டார்.

americk1அவ்வாறு செய்யுமாறு நஜிப் அவருக்கு உத்தரவிட்டாராம்”, என்று அமெரிக் (வலம்) கூறினார்.   டிவிட்டரில் இச்செய்தி வெளிவந்ததும் இணையம் பற்றிக்கொண்டது.  அதன் தொடர்பில் அடுத்தடுத்து பல திவுகள் இடம்பெற்று வருகின்றன.

ஒரு டிவிட்டர் செய்தி அமெரிக் சிங் பலத்த பாராட்டைப் பெற்றார் என்றது.   “நிர்மலன்21: அமெரிக் சிங்கை மலேசிய வழக்குரைஞர் சங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பிப்பாராட்டியது.

ஏஜிஎம்மில் இப்படி ஒன்று நடந்து நீண்ட காலமாயிற்று”.   ஏஜிஎம்-முக்கு வெளியில் மலேசியாகினி பல வழக்குரைஞர்களைச் சந்தித்தது. அவர்கள் அமெரிக் சில  வாரங்களுக்குமுன்  சிசில்  எப்ரேஹமைச் சந்தித்தது தங்களுக்குத் தெரியும் என்றனர்.   இச்செய்தியை இங்கு பதிவேற்றும் நேரம் வரை ஏஜிஎம்-மில் அம்மகஜர் மீதான விவாதம் தொடர்ந்து  நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதன் தொடர்பில் மலேசியாகினி சிசில் அப்ராஹமைத் தொடர்புகொண்டு வினவியதற்கு அவர் கருத்துரைக்க   மறுத்து விட்டார்.

பாலா, தாம் செய்திருந்த முதலாவது சத்திய பிரமாணத்தில் மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷாரீபுவின் கொலையில் நஜிப்புக்குத் தொடர்புண்டு என்று கூறியிருந்ததை மறுத்து இரண்டாவதாக ஒரு சத்திய  பிரமாணத்தைச் செய்தார். அது, மேலிட உத்தரவின்பேரில் செய்யப்பட்ட ஒன்று எனக் கூறப்பட்டு வந்தது.   இரண்டாவது எஸ்டி-யுடன் தொடர்புகொண்ட வழக்குரைஞரை மன்றம் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஒன்றை வழக்குரைஞர்கள் சிலர் இன்றைய ஏஜிஎம்-மில் கொண்டு வந்தனர்.

‘நஜிப் பதில் சொல்ல வேண்டும்’

பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ, அந்த இரண்டு சத்தியப் பிரமாணங்களும் வெளியிடப்பட்ட போது துணைப் பிரதமராக இருந்த பிரதமர் நஜிப் அமெரிக்-கின் கூறியுள்ளதற்கு பதில் அளிக்க வேண்டும் எனக்  கேட்டுக் கொண்டார்.

வழக்குரைஞர் மன்றம் மந்தமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“அந்தப் புகார் மீது விசாரணை நடத்த ஏன் இவ்வளவு தாமதமானது என்பதையும் வழக்குரைஞர் மன்றம் விளக்க வேண்டும்.” என கோபிந்த் விடுத்த அறிக்கை கேட்டுக் கொண்டது.

americk2பாலா நேற்று மாரடைப்பால் காலமானார்.

பாலாவின் குடும்பத்துக்கு அந்த ஏஜிஎம்-ல் கலந்து கொண்ட வழக்குரைஞர்கள் நன்கொடை அளித்தனர். மொத்தம் 18,500 ரிங்கிட் சேர்ந்தது. அந்தத் தொகை பாலாவின் மனைவியிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்-டம் கொடுக்கப்பட்டது.

அமெரிக் உறங்க முடியவில்லை

நேற்றிரவு தாம் தூங்க முடியாமல் தவித்ததாக அமெரிக் ஏஜிஎம்-க்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

கூட்டத்தில் தாம் தகவலை தெரிவித்ததின் மூலம் வாக்குறுதியை மீறி விட்டதை அவர் ஒப்புக் கொண்டார்.

என்றாலும் நீதிக்குப் போராடிய பாலசுப்ரமணியத்தின் பணியை தாம் தொடர விரும்புவதாகக் குறிப்பிட்டஅமெரிக், அது தமக்காக இல்லை என்றும் தனிப்பட்ட துப்பறிவாளர் சிறிது நேரம் சந்தித்த மங்கோலிய மாதுவுக்கு நீதி கிடைப்பதற்காக என்றும் சொன்னார்.

“நேற்றிரவு தூங்க முடியாமல் போன பின்னர் நான் ஏஜிஎம்-ல் தகவல் தெரிவித்தேன்.”

இரண்டு வாரங்களுக்கு முன்பு சிசிலை தமது அலுவலகத்துக்கு அருகில் உள்ள உணவு விடுதியில் சிசிலைச் சந்தித்ததாகவும்  அமெரிக் சொன்னார். இன்னொரு வழக்குரைஞர் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் என்றார் அவர்.

“இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்தது தாம் என்பதையும் நஜிப் அதற்கு உத்தரவிட்டார் என்பதையும்  சிசில் அப்போது என்னிடம் ஒப்புக் கொண்டார். சிசில் அதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“நான் அவருடைய மன்னிப்பை ஏற்றுக் கொண்டேன்,” என்றார் அமெரிக்.