சிலாங்கூர் மந்திரி புசார், முன்னாள் எம்ஏசிசி தலைவர் மன்னிப்புக் கேட்டதை ஏற்றுக் கொண்டார்

khalidமுன்னாள் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் அகமட் சைட் ஹம்டான் 2009ம் ஆண்டு தாம் விடுத்த ஒர் அறிக்கை தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமிடம் திறந்த நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அகமட் சைட்டின் அறிக்கையை வெளியிட்ட இரண்டு நாளேடுகளில் தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதை வெளியிடவும் அகமட் சைட் ஒப்புக் கொண்டுள்ளதாக மந்திரி புசாரைப் பிரதிநிதித்த வழக்குரைஞர் சங்கர நாயர் கூறினார்.

அது நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸின் முதல் பக்கத்தில் அது இடம் பெற வேண்டும். தி ஸ்டார் நாளேட்டில் அவ்வாறு செய்வதற்கு சிறப்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.khalid1

“செலவுத் தொகையாக 10,000 ரிங்கிட் கொடுக்கவும் பிரதிவாதி ஒப்புக் கொண்டுள்ளார்,” என சங்கரா கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்துக்கு வெளியில் இன்று காலை நிருபர்களிடம் கூறினார்.

அந்தத் தீர்வு நீதிபதி லாவ் பீ லான் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.

2009ம் ஆண்டு அந்தக் கருத்தைத் தெரிவித்த போது தீய நோக்கம் ஏதுமில்லை என அகமட் சைட்  தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை வாசித்த போது கூறினார்.

“அந்த விவகாரம் மீது கருத்துச் சொல்லுமாறு நிருபர்கள் கேட்ட போது அந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.  அந்த அறிக்கை விடுக்கப்பட்ட போது புலனாய்வுப் பத்திரங்கள் மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறைத் தலைவருக்கு சமர்பிக்கப்படவில்லை என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்,” என்றார் அவர்.

மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின்னர் அகமட் சைட் காலித்-உடன் கை குலுக்கினார்.

மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் தாம் இழப்பீடு எதனையும் கோர விரும்பவில்லை என்றும் காலித் சொன்னார்.