‘புரொஜெக்ட் ஐசி-க்கு மகாதிர் ஒப்புதல் இருந்தது’- முன்னாள் டிஓ

1doமுன்னாள் சண்டாகான் மாவட்ட ஆட்சியர் (டிஓ) ஹஸ்ஸானார் இப்ராகிம்  1980-களில் ‘புரொஜெக்ட் ஐசி’-இல் தாமும் சம்பந்தப்பட்டிருந்ததை  ஒப்புக்கொண்டார்.  அத்திட்டத்துக்கு அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் ஒப்புதல் இருந்ததாக தாம் கேள்விப்பட்டதாகவும் அவர் கூறினார்.

1do drm1980-களில் தாம் ஒரு “இரகசிய கூட்டத்தில்” கலந்துகொண்டதாகவும் அதில் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த மெகாட் ஜூனிட் மெகாட் ஆயுப் அத்திட்டத்தில் “மகாதிருக்குத் தொடர்புண்டு என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்” என்றும் ஹஸ்ஸானார் (இடம்) கூறினார்.

அக்கூட்டத்தில் மொத்தம் 15 அதிகாரிகள் கலந்துகொண்டார்கள் என்றாரவர். அவர்களில் மூவர் போலீஸ் அதிகாரிகள்.  குடிநுழைவுத்துறை அதிகாரிகள் தேசிய பதிவுத்துறை அதிகாரிகள் (என்ஆர்டி) அதிகாரிகள் போன்றோரும் அங்கிருந்தனர்.

 

ஹஸ்ஸானார் ,62, நேற்றிரவு லாஹாட் டத்துவில் சூலு ஊடுருவல் மீதான கருத்தரங்கம் ஒன்றில் பேசினார்.  கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் நடைபெற்ற அந்நிகழ்வை சோலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) ஏற்பாடு செய்திருந்தது.

இப்போது பத்து சபி பிகேஆர் தலைவராகவுள்ள அவர், முஸ்லிம் குடியேறிகளுக்குக் குடியுரிமை வழங்கும் திட்டம் 1980-கள் தொடக்கத்தில் தொடங்கியது என்றார்.

1do1“அப்போதெல்லாம் சீன வாக்காளர்களே மாநிலத் தேர்தலில் வெற்றியாளர்களைத் தீர்மானிப்பவர்களாக இருந்தனர்”, என்று ஹஸ்ஸானார் (இடம்) விளக்கினார்.

“எனவே, அம்மாநிலம் முஸ்லிம்களின் கைவசம் இருப்பதை உறுதிப்படுத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது”.

1982-இல், சண்டாகான் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, 500 குடியுரிமை பதிவு பாரங்களில் கையொப்பமிடச் சொல்லி தாம் பணிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

“சாபாவில் 1976-க்கும் 1984-க்குமிடையில் 125,000-க்குக் குறையாத குடிநுழைவாளர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என்று என்னால் கூற முடியும்”.

புரொஜெக்ட் ஐசி வெற்றிபெற உதவ வேண்டும் என்று மெகாட் ஜூனிட் கேட்டுக்கொண்டதும் தாம் சாபா என்ஆர்டி தலைவர் ஹாஜி சனி அட்னானிடம நயமாக பேசி அவரையும் அத்திட்டத்துக்குள் கொண்டுவர முயன்றதாகவும் அவர் சொன்னார். ஆனால், ஹாஜி சானிக்கு அத்திட்ட,ம் அடியோடு பிடிக்கவில்லை.

“இவர்கள் பிற்காலத்தில் மாநிலத்தையே கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிவிடுவார்கள் என்றவர் சொன்னார்”,என ஹஸ்ஸானார் தெரிவித்தார்.

அத்திட்டத்தில் பல ஆண்டுகள் மத்திய அரசாங்கத்துக்கு உதவினாலும்கூட 1988-இல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் 59 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

“ஒரு நாள் மெகாட் ஜூனிட் என்னை கோலாலும்பூருக்கு அழைத்து பார்டி பெர்சத்து சாபா(பிபிஎஸ்) மீண்டும் பிஎன்னில் இணைவது பற்றி இரு கட்சிகளும் பேச்சு நடத்துவதாகக் கூறினார். பிஎன்னில் சேர்வதற்கு பிபிஎஸ் தலைவர் சில நிபந்தனைகள் விதித்துள்ளார். அவற்றில் ஒன்று, பிஎன் என்னைக் கைது செய்ய வேண்டும் என்பது”, என ஹஸ்ஸானார் விவரித்தார்.

அவர் சாபா திரும்பிச்செல்ல விமான நிலையம் சென்றபோது அங்கு கைது செய்யப்பட்டார்.

அம்னோ மெளன கலவரத்துக்கு ஏற்பாடு செய்தது’

ஹஸ்ஸானார், 1986 மார்ச் 18 கோத்தா கினாபாலு மெளனக் கலவரம் பற்றியும் விவரித்தார். அரிதாகவே பேசப்படும் அக்கலவரத்தைத் தூண்டிவிட்டது அம்னோ தலைவர்கள்தான் என்றார். பிஎன் ஆதரவுபெற்ற பார்டி பெர்ஜெயா 1985 மாநிலத் தேர்தலில் எதிர்பாராமல் தோற்றதை அடுத்து அக்கலவரம் மூண்டது.

“தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் செய்யுமாறு எங்களுக்குக் கூறப்பட்டது. இர்ண்டொருவருக்கு சேதம் என்றால்கூட பரவாயில்லை என்று மகாதிர் கூறியதாகவும் தெரிகிறது”, என்றாரவர்.

1do harrisஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

கலவரத்தில் ஐவர் உயிரிழந்தனர். ஹாரிஸ் சாலே (வலம்) உள்பட சுமார் 1,200 பேர் கைதானார்கள்.

“எங்களுக்கு ரிம100 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், ஹாரிஸ் அபராதத்தை எதிர்த்து வழக்காடப் போவதாகக் கூறினார். அதிகாரிகள் மேலும் அழுத்தம் கொடுத்தால் உண்மையை வெளிப்படுத்தப்போவதாக மிரட்டினார். பின்னர், அவர் மட்டும் எந்தக் குற்றச்சாட்டுமின்றி விடுவிக்கப்பட்டார்”.

கமுக்கமாக நடைபெற்ற புரொஜெக்ட் ஐசி-யில் மத்திய அரசுக்கு உதவியாக இருந்தும்கூட தாம் சிறைவைக்கப்பட்டதை எண்ணி ஹஸ்ஸானார் வருந்தினார்.

“என்னைக் கேட்டால் இதைத்தான் சொல்வேன், அம்னோவைச் சேர்ந்தவர்களுடன் சேராதீர்கள்”, என்றாரவர்.