ரோஸ்மா: அல்தான்துயா கொலையில் நான் சம்பந்தப்படவில்லை

altanமங்கோலிய மொழிபெயர்ப்பாளர் அல்தான் துயா ஷாரிபு கொலையில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதின் கூறிக் கொண்டுள்ளதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் மறுத்துள்ளார்.

அல்தான்துயா கொல்லப்பட்ட 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி தாம் கோலாலம்பூரில் இஸ்லாமிய ஆதரவற்றோர் நலன் சங்கத்தில் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன் என இன்று வெளியிடப்பட்ட தமது சுய சரிதையில் கூறியுள்ளார்.

“நான் அன்றைய தினம் மாலையிலிருந்து நள்ளிரவு வரை தாபோங் ஹாஜி கட்டிடத்தில் இருந்தேன்.”

அதற்கு நேரில் பார்த்த பல சாட்சிகள் உள்ளனர்,” என அவர் அந்த சுய சரிதையில் 140வது பக்கத்தில் தெரிவித்துள்ளார்.altan1

“எனக்கு முன்னாள் ஒரு பல்லி விழுந்தால் கூட நான் ஒடி விடுவேன். அத்துடன் எனக்கு இருட்டைக் கண்டாலும் பயம். கொலை நடந்த இடமான மலைக்கு நான் எப்படி ஏறிச் செல்ல முடியும் ?” என ரோஸ்மா அந்தப் புத்தகத்தில் வினவியுள்ளார்.

தமக்கு எதிராக கூறப்பட்ட ‘அவதூறு’ காரணமாக தாம் புக்கிட் அமானில் ஆறு மணி நேரத்துக்கு ‘விசாரிக்கப்பட்டதாகவும்’ அவர் தெரிவித்தார்.