அம்னோ தொடர்புடைய அம்னோ வலைப்பதிவாளரான பாப்பாகோமோ, ஆபாசப் படங்களை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக அன்வார் இப்ராஹிம் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அன்வார், இன்னொரு ஆடவருடன் அணுக்கமாக இருந்ததாக கூறப்படும் வீடியோவிலிருந்து அந்தப் படங்கள்
எடுக்கப்பட்டவை என வான் முகமட் வான் டெரிஸ் என்ற உண்மையான பெயரைக் கொண்ட அந்த
வலைப்பதிவாளர் கூறிக் கொண்டுள்ளார்.
அந்த வெளியீட்டை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்பதற்கு பாப்பாகோமோ-வுக்குக் கொடுக்கப்பட்ட 48
மணி நேரக் காலக் கெடு முடிந்து விட்டது என்றும் அந்த ‘வீடியோவை’ சேர்க்கப் போவதாக அந்த
வலைப்பதிவாளர் மருட்டியிருக்கிறார் என்றும் வழக்குரைஞருமான பிகேஆர் உதவித் தலைவருமான என்
சுரேந்திரன் அந்த வழக்கைத் தாக்கல் செய்த போது கூறினார்.
அது குறித்து அன்வார், போலீசிலும் மலேசிய பல்லூடக, தொடர்பு ஆணையத்திலும் புகார் செய்ய மாட்டார்
என்றும் அவர் சொன்னார். ஏனெனில் கடந்த காலத்தில் பல முயற்சிகள் செய்யப்பட்டும் பலனில்லை என்றார்
அவர்.
“அத்தகைய புகார்கள் மீது அந்த அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் அவை அம்னோ, பிஎன்
கருவிகள். ஆகவே நீதிமன்றத்தில் வழக்குப் போடுவதே நல்லதாகும்,” என அந்த பிகேஆர் உதவித் தலைவர்
சொன்னார்.
வான் முகமட் வான் அஸ்ரியை ஒரே பிரதிவாதியாக அன்வார் அந்த வழக்கில் பெயர் குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீடுகளையும் அவர் கோரியுள்ளார்.
இது போன்ற அறிக்கைகளை மீண்டும் வெளியிடுவதிலிருந்து பாப்பாகோமோ-வுக்குத் தடை விதிக்குமாறும் அவர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.