அஸ்ஸிமுடி மார்ச் 11ம் தேதி சபாவிலிருந்து வெளியேறி விட்டார்

kiramசுலு பயங்கரவாதத் தலைவர் அஸ்ஸிமுடி என்ற அக்பிமுடின் கிராம் மார்ச் 11ம் தேதி நாட்டிலிருந்து வெளியேறி  விட்டார். இப்போது தென் பிலிப்பின்ஸில் உள்ள சிறிய தீவுகளில் மறைந்து வாழ்கிறார்.

அந்தத் தகவலை பாதுகாப்பு வேவுத் துறை உறுதி செய்துள்ளதாக கூறிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுல்கெப்லி முகமட் ஜின் கூறினார்.

“அஸ்ஸிமுடி சபாவில் உள்ள தமது ஆதரவாளர்களை கை விட்டு விட்டு வெளியேறி விட்டார். இப்போது ஒரு  தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு என இடம் மாறிக் கொண்டே இருக்கிறார்.”

மோரோ மக்கள் தமது இடத்தைக் கண்டு பிடிப்பதைத் தவிர்ப்பதும் பிலிப்பின்ஸ் அதிகாரிகள் தம்மைக் கைது
செய்து விடுவர் என்ற அச்சமும் அஸ்ஸிமுடி இடம் மாறிக் கொண்டிருப்பதற்கு காரணம்,” என அவர் லஹாட் டத்துவில்  பெல்டா சஹாபாட் 16 நடவடிக்கை தலைமையகத்தில் தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் காலித் அபு  பாக்காருடன் இணைந்து நடத்திய நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

அஸ்ஸிமுடியை அவரது சொந்த மெய்க்காவலரே சுட்டுக் கொன்று விட்டார் என்றும் அவரது
ஆதரவாளர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒர் இடத்தில் அவரது சடலம் புதைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு
வலைப்பதிவில் (mymassa. blogspot.com) வெளியான தகவல் பற்றி அவர் கருத்துரைத்தார்.

பிலிப்பின்ஸில் அஸ்ஸிமுடியை பாதுகாப்புப் படைகள் தேடிக் கண்டு பிடிக்குமா என்ற கேள்விக்குப் பதில்
அளித்த சுல்கெப்லி அது தங்களது அதிகார எல்லக்கு அப்பாற்பட்டது என்றார்.

நாட்டின் இரு வழி உறவுகள் வழியாக மேல் நடவடிக்கை எடுக்க இயலும் என அவர் நம்புகிறார்.

பிப்ரவரி 12ம் தேதி தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த 200 ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கு தலைமை ஏற்று
அஸ்ஸிமுடி கிராம் நாட்டுக்குள் ஊடுருவினார். அதற்குப் பின்னர் நிகழ்ந்த மோதல்களில் 63
பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மலேசியப் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.

பெர்னாமா