உங்கள் சட்டைப் பை 41 விழுக்காடு பெருத்து விட்டதா ? – அய்டிலா ரசாக்

GNIஅது 41 விழுக்காடாக அல்லது 49 விழுக்காடாக இருந்தாலும் 2012ம் ஆண்டுக்கான பொருளாதார உருமாற்றத் திட்டம் மீதான ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கை நமக்கு உணர்த்துவது இது தான் – 2020ல் மலேசிய உயர்ந்த வருமானத்தைக் கொண்ட நாடாகத் திகழும்.

அந்த நேரத்தில் சாதாரண மலேசியருடைய சராசரி வருமானம் ஆண்டு ஒன்றுக்கு 48,000 ரிங்கிட்டாக (15,000 அமெரிக்க டாலராக) இருக்கும் என்ற தோற்றத்தை அது தருகிறது.

ஆனால் அது நிகழுமா ? 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரிங்கிட் அளவில் சாதாரண மலேசியர் 41 விழுக்காடு அல்லது மிதமான 24 விழுக்காடு வருமான உயர்வை உணருகிறாரா ? அவர்களுடைய சட்டைப் பை பெருத்து விட்டதா ?

அதற்கு மிக எளிதான பதில் -இல்லை என்பதாகும். ஆகவே அரசாங்கம் பொய் சொல்கிறதா ? அப்படியும் இல்லை.

முதலில் நமது சராசரி குடும்ப வருமானத்தை எடுத்துக் கொள்வோம். புள்ளி விவரத் துறை வெளியிட்ட அதிகாரத்துவ விவரங்கள் அவை.

2009ம் ஆண்டு சராசரி குடும்ப வருமானம் மாதம் ஒன்றுக்கு 4,025 ரிங்கிட் அல்லது ஆண்டுக்கு 48,300 ரிங்கிட்டாக இருந்தது.

GNI1ஒரு குடும்பத்தில் 4.3 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆகவே 2009ல் ஒவ்வொரு நபரும் சராசரி 11,232 ரிங்கிட் வருமானத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அதே ஆண்டு மொத்த தேசிய வருமானத்தில் தனிநபர் சராசரி (ஜிஎன்ஐ)24,879 ரிங்கிட் ஆகும். அது குடும்ப வருமானம் இரு மடங்கு உயர்வாக இருப்பதைக் காட்டுகின்றது

உண்மையில் மலேசியர்கள் 25,000 ரிங்கிட் தனி நபர் வருமானத்தைப் பெற்றுள்ளனரா ? அது உண்மை என்றால்  ஒவ்வொரு நபரும் 1,000 ரிங்கிட் கூடுதலாக கொண்டு வர வேண்டும். அந்தத் தொகை சிறிய குடும்பத்துக்குப் போதுமானது. ஆகவே அந்த கூடுதல் 1,000 ரிங்கிட் எங்கே போனது ?

பணக்கார நிறுவனங்கள் பணக்காரத் தொழிலாளர்கள் அல்ல

மொத்த தேசிய வருமானத்தில் தனிநபர் சராசரி (ஜிஎன்ஐ) ஏன் குடும்ப வருமானத்தைப் பிரதிபலிக்கவில்லை ? மொத்த தேசிய வருமானத்தில் தனிநபர் சராசரியும் குடும்ப வருமானமும் கணக்கிடப்படும் முறை அந்த முரண்பாட்டை விளக்குகின்றது.

ஒரு நாட்டில் பதிவு செய்யப்பட்ட எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் இந்த நாட்டில் இயங்கும் அந்நிய நிறுவனங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் வருமானத்தை வெளிநாடுகளில் இயங்கும் மலேசிய நிறுவனங்கள் கொண்டு வரும் வருமானத்தை கழித்த பின்னர் கிடைக்கும் தொகையும் ஜிஎன்ஐ கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றது. சம்பளம், ஊதியம், ஆதாய ஈவு போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு குடும்ப வருமானம் முடிவு செய்யப்படுகின்றது.

இதனை வேறு வகையாகச் சொன்னால் நிறுவனங்களும் வர்த்தகங்களும் சிறப்பாக இயங்கி இருக்கலாம். அதனால் பொருளாதார வருமானமும் கூடியிருக்கலாம். ஆனால் அது தொழிலாளர்களுக்குக் கூடுதல் சம்பளத்தை அளிக்கும் எனப் பொருள் கொள்ளக் கூடாது. தொழிலாளர்களும் பணக்காரர்களாக முடியாது.

ஜிஎன்ஐ-உடன் ஒப்பிடும் போது சம்பளங்கள் மெதுவாக உயருவதை அதிகாரத்துவ புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

2009க்கும் 2012க்கும் இடையில் தனியார் துறையில் சம்பள உயர்வு ஆண்டுக்கு 4 முதல் 5 விழுக்காடு வரையில் இருந்துள்ளது என பாங்க் நெகாரா கூறுகின்றது. ஆனால் அதே கால அளவில் ஜிஎன்ஐ வளர்ச்சி ஆண்டுக்கு 7.39 விழுக்காடாக இருந்துள்ளது.

உலக அளவிலான சம்பள புள்ளிவிவரத்தை அனைத்துலக தொழிலாளர் நிறுவன இணையத் தளத்தில் பெற முடியும். ஆனால் அது 2011 வரைக்குமான விவரத்தையே வெளியிட்டுள்ளது.

அது தந்துள்ள விவரத்தின் படி சம்பளம் 2009க்கும் 2011க்கும் இடையில் 13.42 விழுக்காடு மட்டுமே கூடியுள்ளது. அந்த விகிதம் அதே கால அளவில் 19 விழுக்காடு கூடிய தனி நபர் ஜிஎன்ஐ வருமானத்தை விடக் குறைவாகும்.

அடுத்து பண வீக்கம். 2010க்கும் 2020க்கும் இடையில் எல்லாப் பொருட்களும் மூன்று விழுக்காடு விலை அதிகரிக்கும் என பொருளாதார உருமாற்றத் திட்டம் சொல்வதையே எடுத்துக் கொள்வோம்.

ஆனால் பண வீக்க புள்ளி விவரங்கள் குறிப்பிட்ட பொருட்களைக் கொண்டு மட்டுமே கணக்கிடப்படுகின்றன. அது பயனீட்டாளர்களுடைய உண்மையான அனுபவத்தைப் பிரதிபலிக்கவில்லை என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பயனீட்டாளர் விலைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பொருளைத் தவிர வேறு பொருட்களை வாங்க நீங்கள் பல இடங்களில் ரிங்கிட் மதிப்பில் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

வருமான ஏற்றத்தாழ்வை மறக்க வேண்டாம்

GNI2இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர் சம்பள உயர்வில் உங்களுக்கு எவ்வளவு மிஞ்சப் போகிறது ?

நீங்களும் நானும் 41 விழுக்காடு அல்லது 49 விழுக்காடு பணக்காரர் ஆகவில்லை. அமெரிக்க டாலருக்கு எதிராக நமது ரிங்கிட் ஏற்றம் கண்டாலும் நமது வருமானம் 24 விழுக்காடு கூடவில்லை.

ஆனால் எண்ணிக்கை புனிதமானது அல்ல என்றும் அர்த்தம் கொள்ளக் கூடாது. அந்த எண்களைப் பயன்படுத்தி குடும்ப வருமானம் பெருகியுள்ளதாக காட்டுவது தான் புனிதமானது அல்ல.

கடந்த மூன்று ஆண்டுகளில் நமது சட்டைப் பைகள் பெருத்துள்ளன என்பதை உணருவதற்கு எனக்கும் உங்களுக்கும் எண்கள் தேவை இல்லை.

உயர்ந்த வருமானத் தகுதி என்பது சாதாரண மலேசியருக்கு அதிகமான வருமானம் என இயல்பாகவே அர்த்தமாகாது என்பதை கௌரவமாக தெரிவிக்கும் அரசாங்கமே நமக்குத் தேவை. உங்களுக்கும் எனக்கும் உயர்ந்த வருமானத்தைக் கொண்டு வர ஏதாவது செய்யும் அரசாங்கமே நமக்குத் தேவை.

————————————————————————————————————————————————
அய்டிலா ரசாக் மலேசியாகினி குழுவில் ஒர் உறுப்பினர்