பிரதமர் நாளை ஹிண்ட்ராப் தலைவர்களைச் சந்திக்கிறார்

hindrafஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர்களை நாளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்   சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த இயக்கம் மீதான தடையை அரசாங்கம் அகற்றியது.

இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பேசுவதற்கு சிறந்த அமைப்பு என அங்கீகரிக்கப்பட்டுள்ள
அமைப்புக்களில் ஒன்றான ஹிண்ட்ராப்புடன் நஜிப் நடத்தவிருக்கும் சந்திப்பு, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு  முன்னர் இந்திய சமூகத்தின் ஆதரவை நஜிப் வலுப்படுத்திக் கொள்வதற்கு உதவும் எனக் கருதப்படுகின்றது.

“ஹிண்டராப் முன்மொழிந்துள்ள ஐந்து ஆண்டு பெருந்திட்டம் மீது பேச்சுக்கள் நடத்த வருமாறு மார் 22ம் தேதி
பிரதமரிடமிருந்து ஹிண்டராப் தலைவர் பி வேதமூர்த்திக்கு அழைப்புக் கிடைத்தது.”

“அது குறித்து ஹிண்ட்ராப் தலைமைத்துவத்திற்குள் விவாதம் நடைபெற்றது. அந்த அழைப்பை ஏற்றுக்
கொள்வது என முடிவு செய்யப்பட்டது.” என ஹிண்ட்ரால் ஆலோசகர் என் கணேசன் மலேசியாகினியிடம்
தெரிவித்தார்.

நாளை பிரதமர் அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு அந்தச் சந்திப்பு நிகழும்.