“அரசாங்கம் நமது பணத்தை செலவு செய்கிறது. அதன் விவரங்களை சொல்ல மறுத்தால் விவரங்களை வெளியிடுமாறு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு நீதியை நிலை நிறுத்த முடியும்.”
நிதிகளைக் கண்காணிக்க எம்பி மேற்கொண்ட முயற்சியை நீதிமன்றம் நிராகரித்தது
அபில்: சுங்கை சிப்புட் எம்பி, சுங்கை சிப்புட் மக்களைப் பிரதிநிதிக்கிறார். ஆனால் அந்தத் தொகுதிக்கான ஒதுக்கீடு எப்படிச் செலவு செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அவருக்கு இல்லை என நீதிமன்றம் சொல்கிறது. தகவல் அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருப்பது சாதாரண மனிதனுக்குக் கூடத் தெரியும்.
சுவாத்: வெளிப்படையான தன்மைக்கு ஜெயகுமார் நடத்தும் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் எந்தச் சட்டத்தை மேற்கோள் காட்டியது? நமது பணம் எங்கே செல்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை நமக்கு உள்ளது.
நீதிமன்றங்கள் குடிமக்கள் அல்லாமல் வேறு யாரைப் பாதுகாக்கின்றன? நீதிபதியும் நீதிமன்றமும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
அரசாங்கம் நமது பணத்தை செலவு செய்கிறது. அதன் விவரங்களை சொல்ல மறுத்தால் விவரங்களை வெளியிடுமாறு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு நீதியை நிலை நிறுத்த முடியும்.
இல்லை என்றால் அந்தப் பணம் மறைக்கப்படுவதின் மூலம் காற்றில் காணாமல் போய் விடும். கணக்கு இருக்காது. அந்தப் பணத்துக்கு எந்த உரிமையும் இல்லாத தனிநபர்களுக்கு அது கிடைத்து அவர்கள் பெருத்து விடுவர்.
லூயிஸ்: டாக்டர் ஜெயகுமார், செலவு பிடித்தாலும் கூட்டரசு நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள். அதற்காக நிதி ஒன்றைக் கூட நீங்கள் தொடங்கலாம். நானும் சிறிய பங்காற்றத் தயார். மக்கள் போராட்டத்துக்கு நிறைய பேர் நன்கொடை அளிப்பர் என நான் நம்புகிறேன்.
பென்-காசி: உங்கள் பதவி உயர்வும் வேலையும் பணயம் வைக்கப்படும் போது உங்களுக்கு வேறு எந்த வழி தான் உள்ளது? உங்கள் அரசியல் எஜமானர்களுக்கு ஆதரவாக இருப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை.
மறைப்பதற்கு அவர்களிடம் நிறைய விஷயங்கள் உள்ளன. அடிபணியும் நீதித்துறையின் மூலம் அது நிறைவேறுகிறது. இந்த நாட்டில் வெளிப்படையான போக்கு என்பது வெகு தொலைவில் இருப்பது வருத்தமளிக்கிறது. அதனை அடைவதற்கு ஒரே வழி நமது “வலிமையைக்” காட்டுவதுதான். அது உடல் வலிமை அல்ல. வாக்குப் பெட்டி ஆகும். ஆம் வாக்குப் பெட்டியில் நமது வலிமையைக் காட்டுவதின் மூலமே நாம் இந்த அரசாங்கத்தை அகற்ற முடியும்.