சிலாங்கூர் சட்டமன்றத்தை முன்னதாக கலைக்கப் போவதில்லை, காலிட் இப்ராகிம்

MB-selangor-dissolution1நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படும் சாத்தியம் குறித்து சில மாதங்களாக கருத்து தெரிவித்து வந்த சிலாங்கூர் மாநில மந்திரி புசார், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்தினார்.

ஆனால், நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதோ, இல்லையோ சிலாங்கூர் மாநில சட்டமன்றம் தன்னிச்சையாகவே எதிர்வரும் ஏப்ரல் 22 இல் கலைந்து விடும் என்று அவர் மேலும் கூறினார். நாடாளுமன்றம் ஏப்ரல் 28 இல் தானாகவே கலைந்துவிடும்.

“நான் இந்த அறிவிப்பைச் செய்வதற்கான அடிப்படைக் காரணம் சிலாங்கூர் மற்றும் மலேசிய மக்களிடையே ஏற்பட்டக்கூடிய குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகும்”, என்றாரவர்.

இது பக்கத்தான் முடிவல்ல

இன்று (மார்ச் 26) நடைபெற்ற பக்கதான் ரக்யாட் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காலிட் இது அவரது சொந்த முடிவே தவிர பக்கத்தான் தலைமைத்துவத்தின் முடிவல்ல என்பதை வலியுறுத்தினார்.

“பக்கத்தான் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு அதே தேதியை ஏற்றுக்கொள்ளுமாறு நான் அவர்கள்டன் பேசி வருகிறேன்”, என்று கூறிய அவர், அம்மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் எந்த முடிவும் இன்னும்  எடுக்கப்பவில்லை என்று மேலும் கூறினார்.

தமது முன்மொழிதல் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஏப்ரல் 22 க்கு முன்னதாக கலைப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் என்றாரவர்.