மலேசிய சோசலிசக் கட்சி (PSM) வழங்கும் ‘மக்கள் படும் பாடு’ உரிமை கானங்களின் இரண்டாம் பதிப்பு (காணொளி) குறுந்தட்டாக நாளை வெளியீடு காணவுள்ளது.
‘மக்கள் படும் பாடு 2.0’ குறுந்தட்டு வெளியீடும் நிகழ்ச்சி (28.03.2013-வியாழக்கிழமை) நாளை மாலை மணி 8-க்கு, (Chinese Assembly Hall, 1 Jalan Maharajalela, Kuala Lumpur ) கோலாலம்பூர் சீன அசம்பளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
“போதும் 56 வருசம் வேணாம் பாரிசான்”, “மாற்றங்கள் மக்களால் மட்டுமே சாத்தியம்” போன்ற கருப்பொருள்களுடன் அடங்கிய ‘மக்கள் படும் பாடு’ எனும் உரிமை கானங்களின் இரண்டாம் பதிப்பில் சிந்திக் வைக்கும் பல புதிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடல் வரிகளை எழுதியுள்ள மலேசிய சோசலிசக் கட்சியின் K.. குணசேகரன், கடந்த 57 ஆண்டுகளாக, பாரிசான் ஆட்சியில் மலேசிய மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து இந்தப் பாடல்களில் எடுத்துரைத்துள்ளார்.
அடுத்தப் பொதுத்தேர்தலை எதிர்பார்த்திருக்கும் இத்தருணத்தில், மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை ஆளும் வர்க்கத்திற்குத் தெரிவிக்க வேண்டிய காலம் கணிந்துவிட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற, பி.எஸ்.எம். கட்சியின் தலைவர்கள் பலர் வருகைபுரியவுள்ளதோடு பல சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது ஆதரைவை அளிக்குமாறு மலேசிய சோசலிசக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மேலதிக விவரங்களுக்கும் 016-5582644 என்ற கைத்தொலைபேசி எண்னுடன் தொடர்பு கொண்டு பேசலாம்.