இசி: பராமரிப்பு அரசாங்கத்துக்கான வழிகாட்டிகள் தேவை இல்லை

azizபராமரிப்பு அரசாங்கத்துக்கான வழிகாட்டிகள் தேவை இல்லை என தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல்  அஜிஸ் முகமட் யூசோப் சொல்கிறார். ஏனெனில் சட்ட அடிப்படை இல்லாமல் அவற்றை அமலாக்க முடியாது  என்றார் அவர்.

தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றன அந்த வழிகாட்டிகளை
சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் தயாரிப்பதாக அவர் தெரிவித்தார் என சின் சியூ நாளேடு
கூறியுள்ளது.

எப்போது அந்த வழிகாட்டிகள் வெளியிடப்படும் என்பதை அப்துல் அஜிஸ் கூறவில்லை.

ஏஜி அலுவலகம் பிரதமர் துறையின் கீழ் வருவதால் அந்த வழிகாட்டிகளை தயாரிப்பதற்கான சட்ட
அதிகாரமோ அத்தகையை வழிகாட்டிகளைத் தயாரிக்குமாறு ஏஜி அலுவலகத்துக்கு ஆணையிடம் அதிகாரமோ  இசி-யிடம் இல்லை என்றும் அவர் சொன்னார்.

“நாங்கள் அவசரமாக அந்த வழிகாட்டிகளை நிர்ணயம் செய்தால் அதனை எந்த அதிகாரத்தின் கீழ் இசி
அதனைச் செய்தது எனப் பலர் வினவுவர்,” என அவர் சொன்னதாகவும் சின் சியூ செய்தி வெளியிட்டுள்ளது.

“பராமரிப்பு அரசாங்க வழிகாட்டிகள் ஆலோசனைகளைப் போன்றவை. ஒழுங்கான மக்கள் அதனைப்
பின்பற்றுவர். அந்த வழிகாட்டிகளை மக்கள் மீறினால் இசி-யால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் அது
சட்டப்பூர்வமானது அல்ல.”

எனினும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் அத்தகைய வழிகாட்டிகளைப் பெற்றுள்ளதை
அரசமைப்புச் சட்ட வல்லுநரான டோமி தாமஸ் நேற்று சுட்டிக் காட்டியிருந்தார்.