சட்டமன்றம் இயல்பாகக் கலைவது பிஎன் -னைப் பாதிக்காது என்கிறார் டாக்டர் மகாதீர்

mahaநெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் நேற்றிரவு இயல்பாக கலைந்து விட்டது, 13வது பொதுத் தேர்தலில்  பாரிசான் நேசனல் (பிஎன்) அடைவு நிலை மீது எந்தத் தாக்கத்தையும் கொண்டிருக்காது என முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உறுதியாக நம்புகிறார்.

“பல விஷயங்களுக்கு ‘முதலாவது’ நிச்சயம் இருக்க வேண்டும். நாம் அதனை அப்படித் தான் பார்க்க
வேண்டும்,” என அவர் லங்காவியில் நிருபர்களிடம் கூறினார்.

PWN Excellence Sdn Bhd-க்கும் Weststar Aviation Service Sdn Bhdக்கும் இடையில் ஒர் ஒப்பந்தம்
கையெழுத்தான பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.

நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் இயல்பாகவே
கலைந்துள்ளது பற்றிக் கருத்துரைக்குமாறு டாக்டர் மகாதீரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அது பிஎன் -னுக்கு நன்மையா தீமையா என்றும் அவரிடம் வினவப்பட்டது.

“நான் இன்று காலை பத்திரிகைகளைப் படித்தேன். நாடாளுமன்றத்தை நஜிப் கலைக்காமல் இருப்பதற்கு
காரணங்கள் உள்ளன. பல விவகாரங்கள் இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை,” என்றார் அவர்.

மாநிலச் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என்றும் அந்த  முன்னாள் பிரதமர் உறுதியாக நம்புகிறார்.