மெகா திட்டத்தை அமலாக்க அவசரப்பட வேண்டாம் என பினாங்கு அரசுக்கு யோசனை

megaமக்கள் நலன் சம்பந்தப்பட்டுள்ளதால் 6.3 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட மெகா திட்டத்தில் பினாங்கு  அரசாங்கம் அவசரப்படக் கூடாது என பினாங்கு மலாய் காங்கிரஸ் கூறியுள்ளது.

மாநில அரசாங்கம் அந்தத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் பொறியியலாளர்கள், மண்ணியல் நிபுணர்கள்,
ஆகியோரது கருத்துக்களைச் செவிமடுப்பதோடு சுற்றுச்சூழல் தாக்கம் மீதான மதிப்பீடையும் பெற வேண்டும்
என அதன் தலைவர் ரஹ்மாட் இஸ்ஹாக் கூறினார்.

“அமலாக்கத்திற்கு முன்னர் அந்தத் திட்டம் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். எல்லா விவரங்களும்
மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்,” என அவர் இன்று ஜார்ஜ் டவுனில் நிருபர்களிடம் தெரிவித்தார்.mega1

பினாங்கு அரசாங்கம் அறிவித்துள்ள அந்த மெகா திட்டத்தின் கீழ் மூன்று துரித நெடுஞ்சாலைகளும் கேர்னி  டிரைவிலிருந்து பாகான் ஆஜாம் வரைக்கும் கடலுக்கு அடியில் 6.5 கிலோமீட்டர் சுரங்கப் பாதையும்  நிர்மாணிக்கப்படும்.

கடலடி சுரங்கப் பாதை திட்டம் நீண்ட கால அடிப்படையில் இழப்பைக் கொண்டு வரும் என்பதால் அதனைக்  கைவிடுமாறு டிஏபி தலைமையிலான பினாங்கு அரசாங்கத்தை அண்மையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  அண்மையில் கேட்டுக் கொண்டது.

போக்குவரத்து நெரிசலுக்கு அந்தத் திட்டம் சிறந்த தீர்வாக அமையாது எனக் குறிப்பிட்ட அதன் தலைவர்
எஸ்எம் முகமட் இட்ரிஸ், பாதுகாப்பு பிரச்னைகளையும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக் கூடிய தாக்கத்தையும்
பினாங்கு அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

பெர்னாமா