இனவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ‘நம்பிக்கை’ நஜிப்பை ஹிண்ட்ராப் கேட்டுக் கொள்ளுமா ?

zul“அம்னோ அங்கீகாரம் பெற்ற நெருக்குதல் அமைப்பு ஒன்று இந்து சமயத்தை இழிவுபடுத்துகின்றது, அதே வேளையில் வலச்சாரி இந்து அமைப்பு ஒன்று தன்னை ஆதரிக்குமாறு அம்னோவிடம் மன்றாடுகின்றது.”

பிகேஆர்: இந்துக்களை அவமானப்படுத்தியதற்காக பெர்க்காசா உதவித் தலைவரை விசாரியுங்கள்

பெர்ட் தான்: கூலிம் பண்டார் பாரு எம்பி-யான அந்த பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் போன்ற
போக்கிரிகள் பக்காத்தான் ராக்யாட் உறுப்பினராக இல்லாததற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சுல்கிப்லி இப்போது பெர்க்காசா வழியாக புதிய எஜமானர் அம்னோவுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் எங்கு சென்றாலும் பிரச்னை தான். அவருக்கு இந்து சமயத் தத்துவங்களைப் பற்றி எதுவும் தெரியாது.
என்றாலும் மற்ற மக்களுடைய சமயத்தை இழிவுபடுத்தும் துணிச்சல் மட்டும் அவருக்கு உள்ளது.

சுல்கிப்லி நன்கு கற்றறிந்த முஸ்லிம் வழக்குரைஞராக இருக்க வேண்டும். இருந்தும் அவர் நல்ல முஸ்லிமாக
நடந்து கொள்ளவில்லை. நல்ல முஸ்லிம் மற்ற சமயங்களை தூற்ற மாட்டார். இந்து சமயம் மீது அவர்
தெரிவித்துள்ள சொற்கள் அந்த சமயத்தைப் பற்றி அவருக்கு ஏதும் தெரியாது என்பதையே காட்டுகின்றது.

இந்து தெய்வச் சிலைகளும் ஒருவர் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள கங்கை ஆற்றில் நீராடுவதும் தேங்காய்  உடைப்பதும் அர்த்தமுள்ள அடையாள நடவடிக்கைகள் ஆகும். இஸ்லாத்திலும் அது போன்ற அடையாள  நடவடிக்கைகள் உள்ளன. அவை சமயத்துக்கு முக்கியமானவை.

ஒரு எம்பி-க்கு அது தெரியவில்லை என்றால் அவர் கண்டிக்கப்பட வேண்டும். சுல்கிப்லி பெர்க்காசா வழியாக
அம்னோவுக்காக பேசுகிறார். இந்தியர்கள் அவருடைய அறிக்கைகளை அவமானமாக எடுத்துக் கொள்ளாமல்
இன்னும் பிஎன் -னை ஆதரிக்க விரும்பினால் அது அவர்களுடைய துரதிர்ஷ்டமாகும்.

புகழேந்தி: இது இந்தியர்களுக்குப் பெரிய அவமானம். தோல்வி அடைந்த அந்த எம்பி சமயங்களுக்கு
இடையில் ஒற்றுமைச் சீர்குலைவை ஏற்படுத்துகிறார். அவர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும். நல்ல, சமய உணர்வுகளைக் கொண்டவர்கள் இது போன்று போதிக்க மாட்டார்கள்.

Ubah Lan…Bila Lagi: ‘நம்பிக்கை’ எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்வதை மில்லியன் கணக்கான மக்கள்  செவிமடுத்துள்ளனர். நஜிப் எந்த ‘நம்பிக்கையை’ பற்றிப் பேசுகிறார் என்பதை மக்கள் அவரிடம் இப்போது  கேட்க வேண்டும்.

இன்னொரு சமயத்தை இழிவுபடுத்திய அந்த எம்பி மீது அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ? இது
அவமானப்படுத்துவது இல்லை என்றால் வேறு என்ன சொல்வது ?

ஒப்பா: அம்னோ அங்கீகாரம் பெற்ற நெருக்குதல் அமைப்பு ஒன்று இந்து சமயத்தை இழிவுபடுத்துகின்றது,
அதே வேளையில் வலச்சாரி இந்து அமைப்பு ஒன்று தன்னை ஆதரிக்குமாறு அம்னோவிடம் மன்றாடுகின்றது.

ஜிமினி கிரிக்கெட்: பிஎன் -னும் சுல்கிப்லி, இப்ராஹிம் அலி, பெர்க்காசா, ரித்துவான் தீ அப்துல்லா போன்ற
தரப்புக்கள், இந்தியர்களை அவர்களுடைய வம்சாவளி தொடர்பிலும் சமயம் தொடர்பிலும் இழிவுபடுத்துவதை  நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதையும் ஹிண்ட்ராப், நஜிப்-உடன் நடத்தும் விவாதத்தில் சேர்த்துக்  கொள்ள வேண்டும்.

‘pendatang’ என அவமானப்படுத்தப்படுவதோடு அந்த அம்னோ ‘ketuanan Melayu’, ‘ketuanan Islam’
வெறியர்கள் சமயத்தையும் தாக்குகின்றனர். சுல்கிப்லி இந்துக்களை மட்டும் சிறுமைப்படுத்தவில்லை. முழுமையாக  முஸ்லிம் அல்லாத அனைவரையும் அவமானப்படுத்தியுள்ளதாகக் கருத வேண்டும்.

பிராத்தனை செய்வதற்கு சிலைகளைப் பயன்படுத்தும் பௌத்தர்களையும் கத்தோலிக்கர்களையும் அவர்கள்
தாக்குவதற்கு வெகு நேரமாகது.

அடையாளம் இல்லாதவன்_3f15: ஒரு வாதத்திற்காக அது நேர்மாறாக நடந்ததாக வைத்துக் கொள்வோம்.
சுல்கிப்லியின் சமயத்தைப் பற்றி யாராவது ஒருவர் அத்தகைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தால் என்ன
நடக்கும் ? இன்னேரம் பெரிய சர்ச்சை உருவாகி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும்.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: அம்னோ மலாய்க்காரர்கள் இந்தியர்களை இப்படி அவமானப்படுத்தினாலும்
அம்னோவிடமே திரும்பச் சென்று அதற்கு வாக்களிப்பதில் இந்தியர்கள் பெருமை கொள்வார்கள். சில்லறைக்
காசுக்காக, பஸ் பயணம் ஒன்றுக்காக, Kentucky Fried Chicken பெட்டி ஒன்றுக்காக, இந்தியர்கள் மீண்டும் பிஎன்
-னுக்கு வாக்களிப்பார்கள். அவர்களை மாற்றவே முடியாது.

அந்த விவகாரம் தங்கள் பெருந்திட்டத்தில் இல்லை என்பதால் ஹிண்டராப்பும் மனித உரிமைக் கட்சியும் அது
பற்றி கருத்துத் தெரிவிக்க மாட்டா. அந்தப் பெருந்திட்டம் அதிக விலை கொடுப்பவருக்கு  விற்கப்படுவதற்காக
ஏலத்தில்  வைக்கப்பட்டுள்ளது.

 

TAGS: