கிட் சியாங் சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட மாட்டார்

லிம்எந்த சட்டமன்றத் தொகுதிக்கும் தாம் போட்டியிடப் போவதில்லை என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் இன்று அறிவித்துள்ளார்.

வரும் பொதுத் தேர்தலில் தாம் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் கவனம் செலுத்தப் போவதாக  அவர் சொன்னார்.

தாம் சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்குப் போட்டியிட எப்போது எண்ணம் கொண்டிருந்தது இல்லை என்றார் லிம்.

“நான் பேராசை பிடித்தவன் எனச் சிலர் என்னைக் குறை கூறியுள்ளனர். ஆனால் எனக்கு சட்டமன்றத்  தொகுதியில் போட்டியிடும் நோக்கமில்லை,” என லிம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இன்று காலை ஜோகூர் ஜெயாவில் நிகழ்ச்சி ஒன்றில் அந்த டிஏபி மூத்த தலைவர் தமது எண்ணத்தை
அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார்.

ஜோகூர் மக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைப்பதைத் தொடர்ந்து ஜோகூர் ஜெயா தொகுதி மீதும் லிம் குறி
வைத்துள்ளதாக ஆரூடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பக்காத்தான் தோழமைக் கட்சிகளுடைய ஒப்புதல் கிடைத்தால் அந்தத் தொகுதியில் டிஏபி சோஷலிச இளைஞர்   பிரிவு குழு உறுப்பினர் லியாவ் சாய் துங் போட்டியிட டிஏபி பரிந்துரைக்கும் என லிம் கூறினார்.லிம்1

“ஜோகூர் ஜெயா தொகுதி குறித்து இன்னும் பேச்சுக்கள் நிகழ்கின்றன. எங்கள் வேட்பாளர் லியாவ்,” என அவர்  குறிப்பிட்டார்.

முதன் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களுடைய ஆதரவை 27 வயதான லியாவ் பெற முடியும் என லிம்  நம்புகிறார்.

ஜோகூர் டிஏபி இளைஞர் பிரச்சாரப் பிரிவுத் துணைத் தலவருமான லியாவ், ஜோகூர் டிஏபி மகளிர் துணைத்  தலைவி இங் சியாம் லுவாங்-கின் புதல்வி ஆவார்.