70 வயதான குழந்தைவேலு குடியுரிமை கோருகிறார்

my cardநிரந்தர வசிப்பிடத் தகுதியைக் கொண்டுள்ள ஆர் குழந்தைவேலு, தமக்கு குடியுரிமையையும் நீல நிற மை  கார்டையும் வழங்க மறுத்த தேசியப் பதிவுத் துறை முடிவு மீது நீதித் துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துக்  கொள்வதற்கு அனுமதி பெற்றுள்ளார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸாலேஹா யூசோப் அந்த அனுமதியை இன்று வழங்கியதாக 70 வயதான குழந்தைவேலுவைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் எம் மனோகரன் கூறினார்.my card1

அனுமதி வழங்கப்படுவதற்கு உள்துறை அமைச்சர், தேசியப் பதிவுத் துறை, கூட்டரசு அரசாங்கம் ஆகிய தரப்புக்களை பிரதிநிதித்த சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் தெரிவித்த ஆட்சேபத்தை நீதிபதி நிராகரித்தார்.

குழாய்களை பொருத்தும் வேலையை குழந்தைவேலு செய்து வருகிறார். ‘மோசமான நடத்தை’ என்ற  காரணத்தின் அடிப்படையில் தமக்கு குடியுரிமை சான்றிதழையும் நீல நிற மை கார்டையும் வழங்குவதில்லை என தேசியப் பதிவுத் துறை எடுத்துள்ள முடிவை ரத்துச் செய்வதற்கு நீதித் துறை மறு ஆய்வுக்கு கடந்த  பிப்ரவரி மாதம் அவர் விண்ணப்பம் செய்திருந்தார்.

my card2அவ்வாறு வருணிப்பதற்கு தமக்கு கிரிமினல் பதிவுகள் ஏதும் இல்லை என வாதாடிய குழந்தைவேலு,  அடையாள ஆவணங்களை வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு ஆணையிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

தமக்கு மை கார்டு வழங்க தேசியப் பதிவுத் துறை மறுப்பது கூட்டரசு அரசமைப்பின் 16வது பிரிவை மீறுகிறது  என்றும் குழந்தைவேலு தமது விண்ணப்பத்தில் கூறிக் கொண்டுள்ளார்.

குழந்தைவேலுவின் பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றாலும் அவர் மலேசியப் பிறப்புச்  சான்றிதழை வைத்துள்ளார். அவர் மலேசியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது  பிள்ளைகள் மசேசிய பிரஜைகள் ஆவர்.