சுல்கிப்லி மன்னிப்பு கேட்டார்: அது ஏற்றுக் கொள்ளப்படலாம் ஆனால் மறக்க முடியாது

zulஉங்கள் கருத்து : ‘ஒருவருடைய வழக்குரைஞராக இருப்பதற்கும் முட்டாள்தனத்துக்கும் தொடர்பு இருப்பதை என்னால் உணர  முடியவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்குரைஞர் முட்டாளாக இருந்தால் அவர் இன்றும்  முட்டாளாகத் தான் இருப்பார்’

சுல்கிப்லி இந்திய சமூகத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்

தோலு: எவ்வளவு சுலபம் ! பல இன பல சமய மக்களைக் கொண்ட அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் எதையாவது சொல்லி விட்டு பின்னர் ‘நான் அதற்காக வருந்துகிறேன்’ எனச் சொல்வது.

வருந்துவதாக சொல்லி விட்டால் மட்டும் ஒருவர் செய்த குற்றங்கள் அனைத்தும் போய் விடுமா ? அப்படி இருந்தால் ஒருவர் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு ஆகியவற்றில் ஈடுபட்டு விட்டு அடுத்து தாம் செய்த குற்றங்களுக்காக வருந்துகிறேன் எனச் சொல்லி விட்டு விடுதலையாகலாமே ?

கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நோர்டின் அவர்களே, நீங்கள் வழக்குரைஞர், தேச நிந்தனைக் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் உங்கள் மீது சுமத்துவதற்கு காலக் கெடு ஏதுமில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சொற்களைச் சொன்னதாக கூறிக் கொள்ள வேண்டாம்.

இந்து சமயம் பற்றிய உங்கள் எண்ணம் மாறி விட்டது எனச் சொல்ல வருகின்றீர்களா ? உங்கள் சமய வெறியை மலேசியா அறியும்.

2008ம் ஆண்டு மதம் மாற்றம் மீது வழக்குரைஞர் மன்றம் நடத்திய விவாத அரங்கிற்குள் நீங்கள் நுழைந்து ஆர்ப்பட்டம் செய்தீர்கள்.

அச்சுறுத்தக் கூடிய முரட்டுத்தனமான ஆர்ப்பாட்டம் காரணமாக போலீசார் அந்தக் கூட்டத்தை ‘பாதுகாப்பு காரணங்களுக்காக’ இடையில் நிறுத்தினர்.

சலினா: உஸ்தாஜ் சுல்கிப்லி என் தந்தையின் வீட்டுக்கு எதிரில் உள்ள சூராவில் போதிப்பது வழக்கம். வகுப்பு இருக்கும் போது சாலையின் இரு பக்கமும் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். ஒரே நெரிசலாக இருக்கும். (இன்று வரை)

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் என் தந்தை மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. நான் சூராவுக்குள் சென்றேன். அன்றைய தினம் போதித்துக் கொண்டிருந்த சுல்கிப்லியிடம் எங்கள் நுழைவாயிலை தடுத்துக் கொண்டிருக்கும் கார்களை அகற்றுமாறு அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

மிகவும் கவலையில் இருந்த புதல்விக்கு அவர் கொடுத்த பதில் என்ன தெரியுமா ? “Alaahhhh, itu je ker.” அவரது குரலில் எந்த அனுதாபமும் இல்லை. அவரது வகுப்புக்கு நான் இடையூறு செய்து விட்டேன் என்ற அவரது எரிச்சல் தான் தெரிந்தது. அடுத்த நாள் என் தந்தை இறந்து விட்டார்.

சுல்கிப்லி ஆணவம் பிடித்த மனிதர். அவர் இந்து சமயத்தை இழிவுபடுத்தியது எனக்கு வியப்பைத் தரவில்லை. அவர் பாஸ் கட்சியில் இருந்த போது என்னிடம் அவர் இரக்கமில்லாமல் நடந்து கொண்டதும் எனக்கு வியப்பை அளிக்கவில்லை.

அனைவருக்கும் நியாயம்: “நான் அப்போது முதல் குதப்புணர்ச்சி வழக்கில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு வழக்குரைஞராக இருந்தேன். அப்போது நான் ஏதும் அறியாதவனாக இருந்தேன்.

இப்போது நீங்கள் ஏதும் அறியாதவர் மட்டுமல்ல. முட்டாளாகவும் இருக்கின்றீர்கள். உங்கள் முட்டாள்தனம்
அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

ஏசிஆர்: ஒருவருடைய வழக்குரைஞராக இருப்பதற்கும் முட்டாள்தனத்துக்கும் தொடர்பு இருப்பதை என்னால்   உணர முடியவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்குரைஞர் முட்டாளாக இருந்தால் அவர் இன்று  யாரைப் பிரதிநிதித்தாலும் முட்டாளாகத் தான் இருப்பார்

Ez24get: நீங்கள் கேட்டுக் கொண்டது என்ன மன்னிப்பா ? 10 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ் கட்சியில் இருந்த போது முட்டாளாக இருந்ததாக நீங்கள் சொல்கின்றீர்கள்.

ஆனால் இப்போது பைபிள்களை எரிக்கவும் ரத்தம் சிந்தவும் தயங்காத ஒர் அமைப்பான பெர்க்காசா உதவித் தலைவராக மேலும் முன்னேற்றம் கண்டுள்ளீர்கள்.

செய்த தவறுக்கு நீங்கள் மன்னிப்புக் கேட்டதாகத் தெரியவில்லை. கொஞ்சம் கூட வருத்தம் தெரிவிக்காமல் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளீர்கள்.

கேஎஸ்டி: அவர் முதலில் பாஸ் கட்சியிலிருந்தும் பின்னர் பிகேஆர் கட்சியிலிருந்தும் துரத்தப்பட்டார். ஆனால் அம்னோ அவரை கள்ளத்தனமான ஏற்பாடு மூலம் ஏற்றுக் கொண்டது. அந்த மனிதரைப் பற்றியும் அவரது எஜமானர்களைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவ்வளவு தான்.

அவருக்குத் துணிச்சல் இருந்தால் கூலிம் பண்டார் பாரு தொகுதியில் மீண்டும் நிற்கட்டும். அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை இந்து வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்பதைப் பார்ப்போம்.

Apapunboleh: அவர் சில ஆண்டுகளாக சமய வெறியராகவே இருந்து வருகிறார். அவர் உங்கள் கன்னத்தில் அறைவார். பின்னர் நெருக்குதல் இருந்தால் வருந்துகிறேன் என்பார். அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். காரணம் அவர் ‘சரியான’ முகாமைச் சார்ந்தவர்.

கிண்டல்: மன்னிக்கப்படலாம் ஆனால் மறக்கப்படவில்லை. அந்த வெறியர் பத்து ஆண்டுகளில் மிக மோசமாக  மாறியுள்ளார்.

TAGS: