பினாங்கு சட்டமன்றம் நாளை கலைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கு அனுமதியைப் பெறுவதற்காக முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று ஆளுனர் அப்துல் ரஹ்மானை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
“நாளை கலைக்கலாம் என்று ஆளுனரிடம் பரிந்துரைத்துள்ளேன்”, என லிம் கூறினார்.
“இப்போது பக்காத்தான் ரக்யாட் தலைமை மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள கோலாலும்பூருக்கு விரைந்து போக வேண்டியுள்ளது. நாளைக் காலை 10.30க்கு செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுவேன்”, என்றாரவர்.