பக்காத்தான் வெற்றிபெற 7 விழுக்காடு வாக்குகள் மாறி வர வேண்டும்

commentதேர்தல் கண்ணோட்டம் – CHONG ZHEMIN : இந்த 13வது பொதுத் தேர்தலில்தான் மலேசியர்கள், முதன்முறையாக, ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு என்ற எண்ணத்துடன் வாக்களிக்கச் செல்கிறார்கள்.

எதிர்வரும் தேர்தலில் முடிவுகள் மூன்று வகையாக அமையும் சாத்தியம் உண்டு:

நிலவரம் 1- பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும்

நிலவரம் 2- பக்காத்தான் இப்போதுள்ளதைவிட கூடுதல் இடங்களைப் பெறலாம்

comment1நிலவரம் 3- தேர்தலில் பக்காத்தானுக்கு வெற்றி

நிலவரம் 1-  குறைவான சாத்தியம்தான்

பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற வேண்டுமானால் 2008-இல் பக்காத்தானுக்குச் சென்ற வாக்குகளில் 1.5விழுக்காடு அதற்கு ஆதரவாக திரும்பிவர வேண்டும்.

அது சாத்தியமானால் பிஎன் 2008-இல் வென்ற 140 இடங்களுடன் மேலும் 11 இடங்களைப் பெறும். அப்படி நடந்தால் நாடாளுமன்றத்தில் அதன் இடங்கள் 151 ஆகக் கூடும். அதன்வழி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும் வந்து சேரும். ஆனால், இது சாத்தியமில்லை. ஏனென்றால், வாக்காளர்களில் கணிசமான எண்ணிக்கையினரான சீனர்கள் பிஎன்னுக்கு எதிர்ப்பாய் இருப்பதாகத் தெரிகிறது.

(காண்க புள்ளி விவர விளக்க அட்டவணை-நிலவரம் 1)

நிலவரம் 2-  நடுத்தர வாய்ப்புள்ளது

இரண்டாவது நிலவரம் நடக்க நடுத்தர வாய்ப்பே உண்டு. அது நடக்க வேண்டுமானால் பக்காத்தான் அதன் கைவசமுள்ள இடங்களுடன் மேலும் ஒன்பது இடங்களைப் பெற வேண்டும்.

2008-இல், பிஎன் பெற்ற வாக்குகளில் 1.5விழுக்காட்டைப் பக்காத்தான் தன் பக்கமாக இழுக்க முடிந்தால் அதன் வசமுள்ள 82 இடங்களுடன்  மேலும் ஒன்பது இடங்களைச் சேர்த்துக்கொள்ள முடியும். இதன்வழி அதற்குள்ள இட எண்ணிக்கை 91ஆக உயரும். ஆனாலும், ஓர் எளிய பெரும்பான்மை பெற அது 21 இடங்கள் குறைவுதான்.

(காண்க புள்ளி விவர விளக்க அட்டவணை-நிலவரம் 2)

நிலவரம் 3- அதிக வாய்ப்புள்ளது

மூன்றாவது நிலவரம் பக்காத்தான் அடுத்த அரசாங்கத்தை அமைப்பது. இதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது.

இது நிறைவேற வேண்டுமானால், 2008-இல் பிஎன் பெற்ற வாக்குகளில் ஏழு விழுக்காட்டைப் பக்காத்தான் தனக்கு ஆதரவாகத் திருப்ப வேண்டும்.

comment 2அது நடந்தால் பக்காத்தானுக்குக் கூடுதலாக 38 இடங்கள் கிடைக்கும். அதன்வழி நாடாளுமன்றத்தில் அதன் இட எண்ணிக்கை 120ஆக உயரும். அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தையும் பெறும்.

(காண்க புள்ளி விவர விளக்க அட்டவணை-நிலவரம் 3)

மேற்சொன்ன அனுமானத்துக்கு அடிப்படையான சில காரணக்கூறுகள்:

1. 2008-இல் மாற்றரசுக் கட்சிகள் தேர்தல் உடன்பாடு எதுவும் செய்துகொள்ளவில்லை. ஒரு மாற்றரசுக்கட்சி மற்றொன்றுக்கு வாக்களிப்பது என்பது ஒரு வரம்புக்குட்பட்ட நிலையில்தான் இருந்தது.

comment 32. தேர்தல் தேதி. அதில் பிரதமர் நஜிப், ஒரு துருப்புச் சீட்டை இழந்துவிட்டார் எனலாம். எதிர்பாராத நேரத்தில் தேர்தலை அறிவித்து அவர்களைத் தடுமாற வைத்திருக்கலாம். அதை அவர் செய்யவில்லை. 2008-இல் இருந்ததைவிட  இந்தத் தேர்தலுக்கு எதிரணியினர் முழு ஆயத்தமாகவே இருக்கிறார்கள்.

3.2008 போல் அல்லாமல் இப்போது ஒரு வலுவான போட்டி கொடுப்பதற்கு  எதிரணியினர் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் மாற்று பட்ஜெட்டும் தேர்தல் கொள்கை அறிக்கையையுமே இதற்குச் சான்று.

4. புது வாக்காளர்கள் மாற்றரசுக்கட்சியை ஆதரிப்பதுதான் வழக்கம்.

5. 2008-இல் இருந்ததைவிட இப்போது இணையத்தளங்களை நாடுவோர் தொகை அதிகமாகும். மாற்றரசுக் கட்சிகளுக்கு இணையத்தளங்கள்வழி தகவல் பரப்புவது எளிதாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் மாற்றரசுக்கட்சிகளின் கைதான் மேலோங்கி நிற்கிறது.

6. சமூக இயக்கங்களின் எழுச்சி. குறிப்பாக பெர்சே, ஹிம்புனான் ஹிஜாவ் போன்றவை மதில்மேல் பூனை வாக்காளர்களை மாற்றரசுக்கட்சி பக்கமாக இழுத்துவர உதவும்.

இதர காரணங்கள்

பிஎன் மக்களுக்கு இலவசங்களையும் ரொக்கத்தையும் வாரி வழங்கியுள்ளது. இதனால், அவர்களின் வாக்காளர் ஆதரவு, குறிப்பாக புறநகர் பகுதிகளில் வலுப்பட்டுள்ளது.

ஆனால், நகர்புற வாக்காளர்கள் மாற்றரசுக்கட்சிக்குத்தான் சாதகமாக உள்ளனர். அவர்களுக்கு அதன் சீரமைப்புத் திட்டம் பிடித்திருக்கிறது. ஆனால், புறநகரை ஒட்டியுள்ள தொகுதிகளில் நஜிப்பின் உருமாற்றத் திட்டங்களினால் கவரப்பட்டவர்கள் பிஎன்னுக்குத் திரும்பிச் செல்லக்கூடும். அது நடந்தால் பிஎன் பெரிதும் விரும்பும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அதற்குக் கிடைக்கலாம்.

ஆனால், தேர்தலைத் தள்ளிப்போட்டுக்கொண்டு வந்த விதம் நஜிப்புக்கு அந்த நம்பிக்கை இல்லை. என்பதைத்தான் காண்பிக்கிறது. எனவே, இது நடக்கும் வாய்ப்பு குறைவு என்ற எண்ணமே வலுப்படுகிறது.

மேற்காணும் ஆய்வு 2008 தேர்தல் முடிவை அடிப்படையாக வைத்து செய்யப்பட்டது. புதிதாக மூன்று மில்லியன் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது. வாக்காளர்கள் தொகுதிமாற்றம் செய்யப்பட்டிருப்பது (எடுத்துக்காட்டுக்கு, சி பூத்தே தொகுதியிலிருந்து 5,000 வாக்காளர்கள் லெம்பா பந்தாய்க்கு மாற்றம் செய்யப்பட்டார்கள்) போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இவை தவிர, அந்ததந்த தொகுதிகளுக்கே உரிய விவகாரங்கள், வேட்பாளர்கள் பலம் முதலியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்றாலும், 2013 -இல் வாக்குகள் மாறினால் என்ன நடக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்த ஆய்வுதான் இது. .

=================================================================================================

CHONG ZHEMIN உள்ளூர் பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளர்