சாமிவேலு போட்டியிடுவது நஜிப், பழனிவேல் ஆகியோரைப் பொறுத்துள்ளது

samy13வது பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் என முன்னாள் மஇகா தலைவர் எஸ்  சாமிவேலு கூறிய போதிலும் அவரது நிலையை பாரிசான் நேசனல் (பிஎன்) தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும்  மஇகா தலைவர் ஜி பழனிவேலும் மட்டுமே முடிவு செய்ய இயலும் என மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்  சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.

“வேட்பாளர்கள் யார் என்பதையும் அவர்கள் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதையும் மஇகா தலைவரும் பிஎன் தலைவரும் மட்டுமே இறுதி முடிவு செய்வார்கள். யார் என்ன வேண்டுமானாலும்  சொல்லலாம். ஆனால் முடிவு செய்யும் அதிகாரம் (மஇகா-வுக்கு) அந்த இரு தலைவர்களிடம் மட்டுமே  உள்ளது,” என அவர் புத்ராஜெயாவில் இன்று நிருபர்களிடம் கூறினார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்புவதாகவும் தாம் வெற்றி பெறும் வேட்பாளர் என்றும் சாமிவேலு விடுத்துள்ள அறிக்கை பற்றி கருத்துரைத்த போது டாக்டர் சுப்ரமணியம் அவ்வாறு கூறினார்

அந்தத் தொகுதியின் உறுப்பினராக தாம் 1974ம் ஆண்டு தொடக்கம் இருந்து வந்துள்ள சாமிவேலு 2008ல் அங்கு பிஎஸ்எம் கட்சியின் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ்-டம் 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

-பெர்னாமா