கூடுதல் பணம் கிடைக்கும், எங்களுக்கு வாக்களியுங்கள், பின் கூறுகிறது

BN manifesto1பிஎன்-னுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று இன்று புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெற்ற அதன் ஆதரவாளர்கல் கூட்டத்தில் பாரிசான் மலேசியர்களிடம் கூறியது.

இன்று வெளியிடப்பட்ட அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் மாதம் ரிம3,000 க்கும் குறைவான மாத வருமானம் ஈட்டும் குடும்பம் ஒன்றுக்கு தற்போது கொடுக்கப்படும் ரிம500 பந்துவான் ரக்யாட் மலேசியா (BR1M)  பொதுநல உதவி ரிம1,200 ஆக உயர்த்தப்படும் என்று பாரிசான் அறிவித்தது.

குறைந்த வருமானம் பெறும் தனிப்பட்டவருக்கு தற்போது கொடுக்கப்படும் ரிம250 உதவித் தொகை ரிம600 ஆக உயர்த்தப்படும் என்று பின் தலைவர் நஜிப் ரசாக் அந்த அரங்கத்தில் கூடியிருந்த 15,000 பிஎன் ஆதரவாளர்களின் பெரும் ஆரவாரத்துடன் கூறினார்.

இந்த உதவித் தொகைகள் ஒருமுறை மட்டும் கொடுக்கப்படுவது அல்ல. அது ஆண்டுதோறும்BN manifesto2 கொடுக்கப்படும் என்று அரசு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சியில் நஜிப் கூறினார்.

1மலேசியா புத்தகப் பற்றுச்சீட்டுகள் (BB1M) ரிம100 லிருந்து ரிம300 ஆக உயர்த்தப்படும். பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை ரிம150க்கு உயர்த்தப்படும்.

மலேசியர்கள் கார் விலை படிப்படியாக 20-30 விழுக்காடு குறைக்கப்படுவதையும் எதிர்பார்க்கலாம். அகண்ட அலைவரிசைக்கான கட்டணமும் 20 விழுக்காடு குறைக்கப்படுவதையும் எதிர்பார்க்கலாம்.

பாரிசானின் 31 பக்க தேர்தல் கொள்கை அறிக்கை ஒரே நாடு ஒரே விலை கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் சாபா மற்றும் சரவாக் மக்கள் பலன் அடைவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. வேலை செய்யும் தாய்மார்களுக்காக 1மலேசியா குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

BN manifesto3நாட்டின் பல பகுதிகளிலிருந்து பேருந்துகள் மூலம் வருகையளித்த ஆதரவாளர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே அரங்கத்திற்கு வந்து விட்டனர்.

அவர்களுக்கு வழங்கப்பட பரிசுப் பொருள்கள் பையில் வைக்கப்பட்டிருந்த “We Love BN” மற்றும் பிஎன் கொடிகளையும் உயர்த்திப் பிடித்து ஆரவாரம் செய்தவாறு ஆதரவாளர்கள் இருந்தனர்.

பாரிசான் மீண்டும் சிலாங்கூர், கிளந்தான், கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களை கைப்பற்றுமா என்று நிகழ்ச்சியை நடத்தி எம்சி கேட்ட போது அதற்கு ஆதரவாக கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டனர்.

பலத்த ஆரவாரத்திற்கிடையில் எம்சி “கெலாங் பத்தாவிலிருந்து வந்திருப்பவர்களுக்கு, (டிஎபி மூத்தBN manifesto4 தலைவர்) லிம் கிட் சியாங்கை முடிவு கட்டுவோம்” என்று கூவினார்.

நஜிப்பும் அவரது துணைவி ரோஸ்மா மன்சூரும் வந்தபோது அவர்களுக்கு உணர்ச்சிகரமான “Inilah Barisan Kita” என்ற பாடலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மகாதீரும் அவரது துணைவியார் சித்தி ஹம்சா அலியும் வந்தபோதும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரிசான் தேர்தல் கொள்கையின் முக்கிய கூறுகள்

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பாரிசான்:

1. BR1M உதவித் தொகையை தற்போதைய ரிம500 லிருந்து ரிம1,200க்கு உயர்த்தும்; தனிப்பட்டவருக்கு ரிம250 லிருந்து ரிம600க்கு உயர்த்தப்படும். இது ஆண்டுதோறும் வழங்கப்படும்.

2. 1மலேசியா புத்தகப் பற்றுச் சீட்டு (BB1M) ரிம200 லிருந்து ரிம300 ஆக உயர்த்தப்படும்; பள்ளி உதவி ரிம100 லிருந்து ரிம150 ஆக உயர்த்தப்படும்.

3. தேசிய வாகன கொள்கை மறுஆய்வு செய்யப்படும்; படிப்படியாக காரின் விலை 20-30 விலை குறைக்கப்பட்டு உள்நாட்டு வாகனங்களின் போட்டி ஆற்றலை மேம்படுத்தல்.

4. 1மலேசியா கடைகளின் (KR1M) எண்ணிக்கையை உயர்த்தல்.

5. 1மலேசியா பொருள்களை பெட்ரோல் நிலையங்களிலும் ஹைப்பர்மார்க்கெட்களிலும் விற்பனை செய்தல்.

6. அதிக மக்கள் வாழும் இடங்களில் 1மலேசியா கிளினிக்கள் அமைத்தல்.

7. வேலை செய்யும் பெற்றோர்களுக்காக அதிகமான 1மலேசியா குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைத்தல்.

8. 20 விழுக்காடு வரையில் அகண்ட அலைவரிசைக்கான (ஃபுரோட் பேண்ட்) கட்டணத்தை குறைத்தல்.

9. “ஒரே நாடு”, “ஒரே விலை” கொள்கை அமல்படுத்தல்.