அரசியல் விவாத அரங்கிற்கான இடம் கடைசி நேரத்தில் மறுக்கப்பட்டது

CPPSஅரசியல் களத்தில் இரு புறமும் உள்ளவர்களை சொற்பொழிவாளர்களாகக் கொண்ட ஒர் அரசியல் விவாத  அரங்கம் நிகழ்வதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் வேளையில் அதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்த இடம்  மறுக்கப்பட்டுள்ளது.

CPPS எனப்படும் பொது, கொள்கை ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்துள்ள அந்த விவாதம் நிகழ்வதற்கு
அனுமதிப்பதில்லை எனக் கோலாலம்பூரில் பெர்ஜெயா ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

CPPS, அஸ்லி எனப்படும் சிந்தனைக் களஞ்சியமான ஆசிய வியூக தலைமைத்துவக் கழகத்தின் இயங்குகிறது.

அந்தத் தகவல் கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் இடம் தர மறுப்பது தேவையற்ற செயல்
என்றும் CPPS இயக்குநர் இங் ஈப் சீன் கூறினார்.

“நாங்கள் அந்த நிகழ்வின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.”CPPS1

“பொது மக்கள் பிரச்னைகள் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவதை உறுதி செய்வதும் அதே நேரத்தில்
உரையாற்றுவதற்கு எல்லாத் தரப்புக்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதும் அந்த நோக்கங்களாகும்,” என  அவர் சொன்னார்.

பெர்ஜெயா ஹோட்டல் இடம் கொடுக்க மறுத்ததற்கான காரணத்தை இங் தெரிவிக்கவில்லை.

“13வது பொதுத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கப் போகும் மூன்று முக்கியமான விஷயங்கள் என்ன” என்னும்
தலைப்பிலான அந்த விவாத்தை ரத்துச் செய்வதற்குப் பதில் கோலாலம்பூர் கோரஸ் (Corus) ஹோட்டலில்
அதனை நடத்த CPPS முடிவு செய்துள்ளது.

புதன் கிழமை இரவு மணி 7.30 தொடக்கம் 10.00 மணி வரை அந்த விவாதம் நடத்தப்படும்.

CPPs3பிஎன், பக்காத்தான் ஆகியவற்றைச் சேர்ந்த நான்கு இளம் தலைவர்கள் அந்த விவாதத்தில் பேசுவர்.

பிஎன் சார்பில் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லாவும் மசீச உதவித் தலைவர் கான் பிங்  சியூ-வும் பேசுவார்கள். டிஏபி தேர்தல் வியூகவாதி லியூ சின் தொங்-கும் பாஸ் வியூகவாதி முஜாஹிட் யூசோப்  ராவாவும் பக்காத்தானைப் பிரதிநிதிப்பார்கள்.

புதிய இணைய தொலைக்காட்சி ஒளிபரப்பை வழங்கும் KiniTV-யின் யூ டியூப் அலைவரிசை வழியாகவும்
அகப்பக்கம் வழியாகவும் அந்த விவாதம் நேரடியாக அஞ்சல் செய்யப்படும்.

KiniTV-யும் யூ டியூப்-பும் அந்த நிகழ்வுக்கான அதிகாரத்துவ மேடைப் பங்காளிகளாகும்.

அந்த விவாதத்தை காண்பதற்கு தங்கள் இடங்களை பதிவு செய்ய விரும்பும் பொது மக்கள் CPPS இணையத்
தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அவர்கள் [email protected] என்னும் முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பலாம். அல்லது 03 20932820
எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

முதலில் வருவோருக்கு இடம் என்ற அடிப்படையில் KiniTV நேயர்களுக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.