அன்வார் ஐந்து கெடா நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிவித்துள்ளார்

kedahகெடா மாநிலத்தில் உள்ள ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிகேஆர் வேட்பாளர்கள் பெயர்களை  அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

நோர் அஸ்ரினா சூரிப் என்ற நுரின் அய்னா (மெர்போக்), டாக்டர் அஸ்மான் இஸ்மாயில் (கோலா கெடா) என்
சுரேந்திரன் (பாடாங் செராய், சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ( கூலிம் பண்டார் பாரு ) ஜொஹாரி அப்துல்
(சுங்கைப் பட்டாணி) ஆகியோரே அவர்கள்.

நோர் அஸ்ரினா, அஸ்மான், சுரேந்திரன் (பிகேஆர் உதவித் தலைவர்) ஆகியோர் வேட்பாளர் பட்டியலில்
புதுமுகங்கள் ஆவர். ஜொஹாரி இப்போது சுங்கைப் பட்டாணிக்கான எம்பி- ஆவார்.

மாச்சாங் எம்பி-யும் பிகேஆர் தலைமைச் செயலாளருமான சைபுடின் வரும் தேர்தலில் கூலிம் பண்டார் பாரு
தொகுதியில் நிறுத்தப்படுகிறார்.kedah1

நேற்றிரவு 11 மணிக்கு மெர்போக், பாடாங் பண்டார் லாகுனாவில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள்  முன்னிலையில் அன்வார் ஐந்து வேட்பாளர்களையும் அறிவித்ததாக சுரேந்திரன் தெரிவித்தார்.

நோர் அஸ்ரினா, அஸ்மான் ஆகியோர் நீண்ட கால பிகேஆர் ஆதரவாளர்கள் என்றும் அவர் சொன்னார்.

“நாங்கள் களமிறங்கத் தயாராக இருக்கிறோம். அது பாடாங் செராயில் மட்டுமல்ல. புத்ரா ஜெயாவைக்
கைப்பற்றுவதற்கான போராட்டமாகும்,” என்றும் சுரேந்திரன் தெரிவித்தார்.

பாடாங் செராய் தொகுதியும் கூலிம் பண்டார் பாரு தொகுதியும் முன்னாள் பிகேஆர் தலைவர்களான என்
கோபால கிருஷ்ணன், சுல்கிப்லி நூர்டின் ஆகியோரிடம் உள்ளன.