பதவி விலகியதாகச் சொல்லப்படுவதை ஜோகூர் டிஏபி தலைவர் மறுக்கிறார்

1dr booஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ், மாநில வேட்பாளர் நியமனத்தில் கட்சி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவியிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாகக் கூறும் வதந்திகளை மறுத்துள்ளார்.

ஆனால் அவர், மத்திய தலைமை, மாநிலத் தலைமையை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

1dr boo1பதவி விலகும் நோக்கம் இல்லை என்று இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் பூ (இடம்) கேலாங் பாத்தாவில் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்குடன் சேர்ந்து கேலாங் பாத்தாவில் டிஏபியின் வெற்றிக்காக பாடுபடப்போவதாகக் கூறினார்.

பூ, ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினராவார். அவருடைய தொகுதி கேலாங் பாத்தாவுக்குள் அடங்கியுள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

பல சீன நாளேடுகள், பூவும் மாநிலத் துணைத் தலைவர் நோர்மன் பெர்னாண்டஸ், செயலாளர் டான் சென் மூன் ஆகியோரும் ஜோகூர் டிஏபி வேட்பாளர் தேர்வுக் குழுவிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாக இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

மாநில வேட்பாளர் நியமன விவகாரத்தில் குவான் எங் தலையிட்டதைக் கண்டித்து  அவர்கள் பதவி விலகியதாகக் கூறப்பட்டது.

வேட்பாளர் தேர்வுக் குழுவிலிருந்து விலகியதை ஒப்புக்கொண்ட பூ, அது ஒன்றும் வழக்கத்துக்கு மாறானதல்ல என்றார். மூவரடங்கிய அக்குழு அதன் பணியை முடித்து மாநில வேட்பாளர் பட்டியலை மத்திய தலைமையிடம் ஒப்படைத்து விட்டது. எனவே, அதற்கு இனி வேலை இல்லை.

“வேட்பாளர் பட்டியலை ஒப்படைத்து விட்டோம். அடுத்து நடக்க வேண்டியதை மத்திய தலைமைத்துவம் முடிவு செய்யும். மாநிலத் தலைமை, தன் பரிந்துரைகளை மத்திய தலைமை மதிக்கும் என்று நம்புகிறது”, என்றாரவர்.

 

TAGS: