பிகேஆர்: பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் 14விழுக்காடுதான் புதிது

1bn manifestoகடந்த சனிக்கிழமை பிஎன் வெளியிட்ட தேர்தல் கொள்கை அறிக்கையில் 14 விழுக்காடு அல்லது 23 வாக்குறுதிகள் மட்டுமே புதியவை என்று பிகேஆர் கூறுகிறது.

அந்தத் தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றில் பெரும்பகுதி நடப்பில் உள்ள அரசாங்கத் திட்டங்களின் நீட்சிதான் என்று பிகேஆரின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கூறினார்.அவையும் குறைபாடுள்ளவைதான் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

1bn rafi“15விழுக்காடு வாக்குறுதிகள் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையிலிருந்து உருவி எடுக்கப்பட்டவை”, என்றவர் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

பக்காத்தானின் கருத்துகளை “வெட்கப்படாமல்” தூக்கி பிஎன்னின் தேர்தல் கொள்கை அறிக்கையில் சேர்த்துக்கொண்ட பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சாடிய அவர், அவை  அவர்களுக்குச் சொந்தமானவைதான் என்பதை வாதிட்டு நிரூபிக்க வருமாறும் கேட்டுக்கொண்டார்.

பக்காத்தான் வாக்குறுதிகள் மக்களிடம் வரவேற்பு பெற்றிருப்பதைக் கண்ட நஜிப் அவற்றின் சில பகுதிகளை பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் இணைத்துக்கொள்ள முடிவு செய்தார் என்றாரவர்.

“நாங்கள் மக்களிடம் சென்று நாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேறத்தக்கவைதாம் என்பதைக் காண்பித்திருக்கிறோம்.

மக்களைக் கவரும் பல கருத்துகள் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையிலிருந்து பயன்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன.

“கார் விலைக் குறைப்பு, சாலைக்கட்டணத்தை அகற்றுதல், தனிப்பட்டவர்களுக்கு டெக்சி உரிமம், தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தல் போன்றவை எங்களை‘காப்பி அடிக்கப்பட்டவை’”, என்றாரவர்.

கடந்த சனிக்கிழமை பிஎன் வெளியிட்ட தேர்தல் கொள்கை அறிக்கையில் 14 விழுக்காடு அல்லது 23 வாக்குறுதிகள் மட்டுமே புதியவை என்று பிகேஆர் கூறுகிறது.

அந்தத் தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றில் பெரும்பகுதி நடப்பில் உள்ள அரசாங்கத் திட்டங்களின் நீட்சிதான் என்று பிகேஆரின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கூறினார்.அவையும் குறைபாடுள்ளவைதான் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

“15விழுக்காடு வாக்குறுதிகள் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையிலிருந்து உருவி எடுக்கப்பட்டவை”, என்றவர் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

பக்காத்தானின் கருத்துகளை “வெட்கப்படாமல்” தூக்கி பிஎன்னின் தேர்தல் கொள்கை அறிக்கையில் சேர்த்துக்கொண்ட பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சாடிய அவர், அவை  அவர்களுக்குச் சொந்தமானவைதான் என்பதை வாதிட்டு நிரூபிக்க வருமாறும் கேட்டுக்கொண்டார்.

பக்காத்தான் வாக்குறுதிகள் மக்களிடம் வரவேற்பு பெற்றிருப்பதைக் கண்ட நஜிப் அவற்றின் சில பகுதிகளை பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் இணைத்துக்கொள்ள முடிவு செய்தார் என்றாரவர்.

“நாங்கள் மக்களிடம் சென்று நாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேறத்தக்கவைதாம் என்பதைக் காண்பித்திருக்கிறோம்.

மக்களைக் கவரும் பல கருத்துகள் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையிலிருந்து பயன்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன.

“கார் விலைக் குறைப்பு , சாலைக்கட்டணத்தை  அகற்றுதல்,  தனிப்பட்டவர்களுக்கு டெக்சி உரிமம், தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தல் போன்றவை எங்களைப் பார்த்து ‘காப்பி அடிக்கப்பட்டவை’”, என்றாரவர்.