கோபம் ஆகாது: தேர்தலில் இடம் கிடைக்காதவர்களுக்கு பிரதமரின் ஆறுதல்மொழி

1 bnதேர்தலில் வேட்பாளராவோம் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் நியமனம் இல்லை என்றதும் “கோபம்” கொள்ளக்கூடும் ஆனால், அந்தக் கோபம் 24மணி நேரத்துக்குமேல் இருக்கக்கூடாது என்கிறார் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்.

“அவர்களின் பிரச்னையை (கோபத்தை)க் குறைக்க முயல்வோம். அதனால்தான் என் உரையில் சொன்னேன், 24மணி நேரத்துக்குக் கோபத்துடன் இருக்கலாம் என்று. அதன்பிறகு வேலையில் இறங்கிட வேண்டும்”.

1 bn najibஇன்று கோலாலும்பூரில் பிஎன் உறுப்புக்கட்சித் தலைவர்களுடன் இரகசிய கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தேர்தலில் நிற்கும் தகுதிகொண்டவர்கள் சுயேச்சையாக  போட்டியிட நினைத்தால் அவர்களும் பிஎன் அடையாளச் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் நஜிப் கூறினார்.

“அவர்களை வேட்பாளர்களாக ஏற்று இடமளிக்கலாம் என்று  தோன்றினால் அவர்கள் பிஎன் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்படுவர்.

“இடத்துக்குத் தக்கப்படி இதைச் செய்வோம். ஒன்றிரண்டு இடங்களில் இப்படிச் செய்யலாம்”.

அதே நேரத்தில் எல்லா சுயேச்சை வேட்பாளர்களுக்கும் இடமளிப்பது இயலாத காரியம் என்றும் அவர் சொன்னார்.

“ஏற்கனவே பல வேட்பாளர்கள் காத்திருக்கிறார்கள்”, என்று நஜிப் குறிப்பிட்டார்.

சுவா: ‘என்னைப் பற்றிப் பேச வேண்டாம்’

1 bn1நஜிப்பின் செய்தியாளர் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கை அணுகினார்கள். சுவா, வேட்பாளர்களுக்குரிய இடங்கள் வரம்புக்கு உட்பட்டவை என்பதால் பலர் “கோபம் கொள்வார்கள்” என்பது எதிர்பார்க்கக்கூடியதே என்றார்.

எனவே, பிஎன்னின் நன்மையை முன்னிட்டு நஜிப் நல்ல முடிவெடுக்க வேண்டும் என்றாரவர்.

அவர் தேர்தலில் களமிறங்குவாரா என்று வினவியதற்கு, “என்னைப் பற்றிப் பேச வேண்டாம், பிஎன்னைப் பற்றிப் பேசலாம்”, என்றார்.

“இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை”, என்று கூறியவர், “நஜிப் பேசியதற்கு மாறாக என்னைப் பேச வைத்து அதன்வழி இன்னொரு நெருக்கடியை உருவாக்கவும் முயல வேண்டாம்”, எனவும் கேட்டுக்கொண்டார்.